பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 கொண்டாடுகிறார்கள். தேவசேனாதிபதியாக எம்பெருமான் விளங்குகிறான். அவனுடைய ஆயுதம் வேல். அந்த வேல் புறத்தில் ஆயுதமாகத் தோற்றுவதோடு, அதுவே அகப்பகையைப் போக்கடிக்கின்ற ஞான சக்தியாகவும் இருக்கிறது. அதை வீரவேல் என்றும், ஞான சக்தி என்றும் சொல்வார்கள். தன் கூர்மையால் பகையையும், ஒளியினால் இருளையும், ஆற்றலால் அறியாமையையும் போக்குவது முருகன் கையில் உள்ள வேல். யமன் 'யமனைப் பார்த்து அறைகூவுகிறீர்களே; அவனைப் பகைத்துக் கொள்கிறீர்களே. யமன் பலவிதமான படைக் கலங் களை உடையவனாயிற்றே. அவனை எதிர்த்து வீறு பேசுவதற்கு உங்களிடத்தில் என்ன சக்தி இருக்கிறது?' என்று கேட்ட கேள்விக்கு விடை சொல்வாரைப் போல அருணகிரியார் இந்தப் பாடலில், 'எனக்கு என்ன பயம்? யமனுடைய ஆயுதம் என் னிடத்தில் வருமா? என்னிடத்தில்தான் கவசம் இருக்கிறதே!' என்று பாடுகிறார். அப்படிப் பாடும் பாடலில் வரிசையாக ஆறு ஆயுதங்களைச் சொல்கிறார். வேலா யுதன்,சங்கு சக்ரா யுதன்,விரிஞ் சன்அறியாச் சூலா யுதன்தந்த கந்தச் சுவாமி சுடர்க்குடுமிக் கால்ஆ யுதக்கொடி யோன்அரு ளாய கவசம்உண்டு,என் பால்ஆ யுதம்வரு மோயம னோடு பகைக்கினுமே! 'யமனோடு பகைக்கினுமே என்று சொல்கிறார். பகைக் கினும் என்ற சொல் பகைக்க மாட்டேன்; ஒருகால் பகைத்தாலும்' என்ற பொருளுடையது. யமன் தர்ம ராஜா. தனக்கு விதித்த கட்டளையை இம்மி அளவும் பிசகாமல் நிறைவேற்றி வைப்பவன். ஆண்டவனுடைய அடியான் என்றால் அவனிடம் போக அவனுக்குப் பயமாக இருக்கும். தெரியாமல் சென்று மார்க்கண்டேயனிடத்தில் பட்ட பாட்டை அவன் மறந்திருப் பானா? அவனைக் கண்டு அஞ்சாதவர்கள் அவனைத் தர்மராஜா என்றே அழைப்பார்கள். அஞ்சுபவர்கள் யமன் என்று சொல் வார்கள். இந்த உலகத்தை அழிக்கும் அணுகுண்டு போன்ற ஆயுதங்களை உற்பத்தி செய்யும் விஞ்ஞானிகளையும் அழிக்கும் சர்வ வல்லமை உடையவன் காலன். அவனை எண்ணி அஞ்சு 9C