பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருட் கவசம் பவர்களே பெரும்பான்மையோர், யமன் யமன் என்று வைவதைக் கேட்டிருக்கிறோம். தன் கடமையைச் செய்ய அவன் பிறரிடம் வருகிறான். அவனிடத்தில் எனக்கு என்ன கோபம்? என்ன பகை அவனை நான் பகைத்துக் கொள்ள மாட்டேன். அப்படியே அவன் என்னிடத்தில் தவறாக நடந்து, கோபம் உண்டாகி அவனைப் பகைத்துக் கொண்டாலும் எனக்கு அவனிடத்தில் பயம் ஏதும் இல்லை என்று சொல்வது போலச் சொல்ல வருகிறார் அருணகிரியார். என்பால் ஆயுதம் வருமோ, யமனோடு பகைக்கினுமே? 'யமனோடு பகைத்துக் கொண்டாலும் அவனுடைய ஆயுதம் என்பால் வருமோ? என்னை நெருங்கும் ஆற்றல் அதற்கு இருக்கிறதா? நெருங்கி அந்த ஆயுதத்தினால் என்ன தீங்கை எனக்கு உண்டாக்க முடியும்? என்னிடத்தில்தான் அருளாகிய கவசம் இருக்கிறதே! முருகப் பெருமானுடைய பேரருளாகிய கவசம் இருக்கும்போது எனக்கு என்ன பயம்? என்று விரிவாகச் சொல்கிறார். ஆயுதங்கள் முருகப்பெருமானைப் பற்றிப் புகழத் தொடங்கும் போது முதல் முதலில், வேலாயுதன் என்று சொல்கிறார். 'எனக்குத் துணை யார் தெரியுமா? வேலாயுதக் கடவுள் துணையாக இருக்கிறான். ஆயுதங்களுக்குள்ளே சிறந்த வெற்றி வேலை, அஞ்ஞான இருளைப் போக்கும் ஞான வேலை, அடியார்களைக் காக்கும் பொருட்டு எப்போதும் தன் திருக்கரத் தில் வைத்திருக்கும் முருகனுடைய துணை எனக்கு இருக்கிறது’ என்று சொல்கிறார். அவன் புதிதாக இராணுவத்தில் சேர்ந்த வீரனைப் போன்ற வன் அல்லன். அவன் பரம்பரையே வீர பரம்பரை. வீரர்கள் யாவரும் போற்றும் மாவீர பரம்பரை. அவனைப் பெற்ற பெரு வீரன் சூலாயுதன். சங்கு சக்ராயுதன் விரிஞ்சன் அறியாச் சூலாயுதன் தந்த கந்தச்சுவாமி. 31