பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 கொண்டையை உடையது. பறவைகளில் ஆண் அழகு. மனிதர் களில் பெண் அழகு. ஆண் மயிலுக்கு அழகான தோகை உண்டு. அப்படியே கோழியில் சேவலுக்குத்தான் அழகான கொண்டை உண்டு. செக்கச்செவேல் என்று விளக்கின் ஒளிச் சுடர்போல இருப்பது கோழியின் கொண்டை. சுடர்க்குடுமிக் காலாயுதக் கொடியோன் அந்தச் சேவலின் பெருமையை, "வாள கிரியைத்தனது காலில் இடியப்பொருது வாகைபுனை குக்குடபதாகைக்காரனும்' என்று அருணகிரியார் திருவகுப்பில் சொல்கிறார். அது காலையே ஆயுதமாகக் கொண்டு சக்கரவாளகிரியை இடிக்கிறதாம். இந்தப் பாட்டில் வேல், சங்கு, சக்கரம், காலாயுதம் ஆகியவற்றை வரிசை யாகச் சொன்னார். அருள் என்னும் கவசம் பிறர் தம்மேல் ஆயுதம் எய்தால் அதனால் ஊறுபடாமல் இருப்பதற்குக் கவசம் அணிந்து கொள்வது வழக்கம். கவசமும் ஒருவகை ஆயுதந்தான். பகைவர்கள் எய்கின்ற ஆயுதம் தம்மை வந்து தாக்காமல் இருப்பதற்குப் பாதுகாப்பாக உடம்பெல்லாம் கவசத்தை அணிந்து கொள்வார்கள். தலையின் மேலும் மூடி உண்டு. முகத்துக்கும் மூடி போட்டுக் கொள்வார்கள். யமனுடைய பகை உண்டானால் அவன் ஏவும் ஆயுதங்களினின்றும் நம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்குரிய கவசமாக உதவுவது முருகப் பெருமானுடைய திருவருள். 'வேலாயுதம் உடைய கடவுள் எனக்கு ஒரு கவசம் கொடுத்தான். அதற்கு அருள் என்று பெயர். அது இருக்கும்போது எனக்கு யமனிடத்தில் பயம் இல்லை' என்று சொல்கிறார். என்பால் ஆயுதம் வருமோ யமனோடு பகைக்கினுமே? யமன் ஆயுதங்களை எய்தால் அருளாகிய கவசம் இருக்கிற தென்று சொல்கிறாரே, அந்தக் கவசம் பெற்றவர்களுக்குப் பிற ஆயுதங்களால் ஊறுபாடு நேராது என்பதற்கு ஏதேனும் சாட்சி p_60STL fro 94