பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருட் கவசம் வசிட்டர் கதை lெசிட்ட முனிவரின் கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். கெளசிக மன்னனுக்கு வசிட்டர் ஒரு சமயம் பெரிய விருந்து வைத்தார். காமதேனுவை அழைத்து எல்லோருக்கும் அறுசுவை உண்டி பரிமாறும்படி செய்தார். அந்த அதிசயத்தைக் கெளசிக மன்னன் கண்டான். காட்டில் வாழும் முனிவர் நம்முடைய படை முழுவதற்கும் இவ்வளவு பெரிய விருந்து வைத்தாரே, இதற் கெல்லாம் காரணமாக இருப்பது அந்தப் பசுமாடு அல்லவா? அது நம்மிடத்தில் இருந்தால் எவ்வளவு சிறப்பு என்று நினைத் தான் கெளசிக மன்னன். உடனே வசிட்டரிடம் சென்று, 'அந்த மாட்டை எனக்குக் கொடுத்துவிடுங்கள்' என்று கேட்டான். 'அது என்னால் தருவதற்குரியது அன்று' என்று அவர் சொன்னார். கெளசிக மன்னன் அதைக் கேட்கவில்லை. 'அப்படி யானால் நீயே அதைப் பற்றிக் கொண்டு போ' என்று முனிவர் சொல்லிவிட்டார். மன்னன் ஆட்களை அனுப்பி அதைப் பிடித்து வரச் சொன்னான். படைவீரர்கள் சென்றார்கள். காமதேனு தன் னுடைய உடம்பைச் சிலிர்த்துக் கொண்டவுடன் ஒவ்வொரு மயிர்க்கால் வழியாகவும் ஒவ்வொரு வீரன் குதிக்கப் பலர் திரண்டு கெளசிக மன்னன் அனுப்பிய படை வீரர்களை மாய்த்து விட்டார்கள். இதைக் கண்ட கெளசிக மன்னனுக்கு மீண்டும் வசிட்டரிடம் கோபம் வந்துவிட்டது. இவ்வளவுக்கும் இந்த முனிவன்தானே காரணம்?’ என்று சினந்து அவர்மேலே ஆயுதங் களை எய்யத் தொடங்கினான். வசிட்டர் தம்முடைய கையில் எந்த ஆயுதத்தையும் எடுக்க வில்லை. தம் தண்டை முன்னால் ஊன்றி, கண்ணை மூடிக் கொண்டு ஆண்டவனைத் தியானம் செய்தார். கெளசிக மன்னன் விடுத்த ஆயுதங்கள் எல்லாம் அந்த யோகத் தண்டின் முன்னால் வந்து விழுந்தன. ஆண்டவனுடைய அருளாகிய கவசத்திற்கு முன்பு ஆயுதங்கள் பயன்படாமல் ஒழிந்தன. இந்த இரண்டாவது அதிசயத்தைக் கெளசிக மன்னன் கண்டான். அப்போது அவனுக்குத் தெளிவு உண்டாயிற்று. எத்தனை செல்வம் வைத்திருந்தாலும், எத்தனை படை வீரர்களைப் பெற்றிருந் தாலும் அவற்றால் தனக்குப் பெருமை இல்லை; தவத்தினாலும் ஆண்டவனுடைய அருள் நலத்தினாலும் கிடைக்கிற பெருமையே பெருமை 95