பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருட் கவசம் கவலையும் யோசனையும் இறைவனுடைய திருவருளைப் பெற்றவர்களுக்கு, நாளைக்கு மரணம் வந்து விடுமே என்ற அச்சமில்லை. எந்தக் காலத்தில் ஆயுள் முடிகிறதோ அப்போது இறைவன் தன்னுடைய திருவடி யில் சேர்த்துக் கொள்வான் என்ற உறுதியான நம்பிக்கை அவர் களுக்கு இருக்கும். அந்த நம்பிக்கை இல்லாதவர்களே வருத்தப் பட்டுக் கொண்டிருப்பார்கள். "ஐயோ, யமன் வருவானே' என்று கவலைப்படுவார்கள். கவலை என்பது வேறு, யோசனை என்பது வேறு. ஒரு காரி யத்தை முடிக்க வேண்டுமென்றால் அதனை எப்படி முடிப்பது, யாரைக் கொண்டு முடிப்பது என்ற வகையில் ஆராய்ந்து முயற்சி செய்ய வேண்டும். அப்படி ஆராய்வது யோசனை. "அதைச் செய்ய வேண்டியிருக்கிறதே! என்ன செய்யப் போகிறோம்! தோல்வி அடைந்துவிட்டால் என்ன பண்ணுவது?’ என்று அஞ்சுவது கவலை. இரண்டும் நம் உள்ளத்தில்தான் எழுகின்றன. அறிவாளி கள் நன்றாக யோசனை செய்வார்கள்; ஆனால் கவலைப்பட மாட்டார்கள். செய்யக் கூடியதை எப்படிச் செய்ய வேண்டுமோ அப்படிச் செய்வதற்கு யோசனை செய்து திட்டம் வகுத்து முயற்சி செய்வார்கள். முடியாத காரியத்தைப் பற்றி நினைக்கவே மாட்டார்கள்; கைவிட்டுவிடுவார்கள். மனத்திலே திண்மை இல்லாதவர்கள், செயலாற்றல் இல்லாதவர்கள், ஐயோ செய்ய வேண்டுமே!’ என்று அஞ்சுவார்கள். அவர்கள் கோழைகள். முருகப் பெருமானுடைய திருவருளில் ஈடுபாடும், அவன் நம்மைக் காப்பாற்றுவான் என்ற உறுதிப்பாடும் உடையவர்கள் கவலைப்படமாட்டார்கள். 'தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்ற லரிது" என்று வள்ளுவர் சொன்னார். இறைவனுடைய திருவடியை நம்பித் துணையாகப் பெற்றவர்களுக்கு, அவனுடைய அருளாகிய கவசத்தை அணிந்து கொண்டவர்களுக்கு, மனக்கவலை இராது. அவர்கள் யோசனை செய்வார்களேயன்றிக் கவலைப்பட மாட்டார்கள். அந்த யோசனையினால் முருகப் பெருமானுடைய பெருமையும் அவனுடைய அருளாணையும் இத்தகையன என்று 97.