பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எமராசன் கடைஏடு தனிச் சிறப்பா? யுதக் கூட்டங்களுக்கு நடுவில் வாழ்கின்ற நமக்கு இறைவன் திருவருளாகிய கவசம் இருந்தால் யமனுக்கும் பயப் படாத நிலை வரும் என்று அருணகிரியார் வாய் மலர்ந்தருளி யதைப் பார்த்தோம். “என்பால் ஆயுதம் வருமோ யமனோடு பகைக்கினுமே” என்று அவர் சொன்னவுடன் சிலருக்கு ஒர் எண்ணம் தோன்ற லாம். என்பால் ஆயுதம் வருமோ என்றுதானே சொல்கிறார்? அவரிடத்தில் ஏதோ தனிச்சிறப்பு இருக்கும் போல் இருக்கிறது’ என்ற எண்ணம் உண்டாவது நியாயமே. ஏதோலஞ்சம் கொடுத்து ஒருவன் மற்றொருவனிடம் ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்கிறான். அவன் தன் ஒருவனால்தான் இந்தக் காரியத்தைச் சாதிக்க முடிந்தது என்று செருக்கோடு இருப்பான். அவனுடைய பேச்சைக் கேட்டவர்கள், இவனிடத்தில் உள்ள பணப்பலமோ, செல்வாக்குப் பலமோ அந்தக் காரியத்தை சாதித்துக் கொள்ள உதவிற்று' என்று நினைப்பார்கள். இவ்வாறு, நேர்மையற்ற முறையில் தம் அளவிலே ஊதியம் பெற்று ஒவ்வொரு காரி யத்தையும் நிறைவேற்றிக் கொள்பவர்களிடத்தில் குறைபாடு இருக்கும். காரியம் நிறைவேறின பிறகு அகங்காரம் உண்டாகும். அப்படி அருணகிரியார் சொன்னார் என்று சொல்வது தவறு. ஆனாலும் அவர், அருளாகிய கவசம் என்னிடம் உண்டு. யமன் ஆயுதம் என்பால் வருமோ? என்று சொல்லும்போது அவருக்கு மாத்திரம் உள்ள தனி நியதி அது என்ற எண்ணம் சிலருக்கு வரலாம். அவர் பெரியவர். முருகப்பெருமான் அவருக்கு அருள் செய்தான். ஆதலால் இப்படி வீறு பேசுகிறார். நமக்கும் அந்த அருள் கவசத்திற்கும் நெடுந்துாரம். இனி எத்தனை