பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 பிறவி எடுத்த பிறகு நமக்கு அந்த நிலை வருமோ? என்று எண்ணவும் தோன்றும். பொது உரிமை அருணகிரியார் தாம் பெற்ற இன்பத்தைப் பிறர் பெற வேண்டுமென்று எண்ணுகிறவர். 'கருணைக்கு அருணகிரி' என்று பெயர் வாங்கினவர். ஆகவே, இறைவனுடைய திருவருளால் காலபயம் போகும் என்பதைத் தம்மோடு சார்த்திச் சொன்னவர், அந்த நிலை எல்லோருக்கும் பொது என்பதை உணர வைப்ப தற்கு உடனே இந்தப் பாட்டைச் சொல்கிறார். முருகப் பெருமான் திருவருள் அதைப் பெறுதற்கு முயற்சி செய்கிறவர்கள் எல்லோ ருக்கும் உரியது என்ற எண்ணத்தை உண்டாக்கும் வகையில் இந்தப் பாட்டு அமைந்திருக்கிறது. குமரா சரணம் சரணம்என்று அண்டர் குழாம்துதிக்கும் அமரா வதியில் பெருமாள் திருமுகம் ஆறும்கண்ட தமராகி வைகும் தனியான ஞான தபோதனர்க்குஇங்கு எமராசன் விட்ட கடையேடு வந்துஇனி என்செயுமே? என்ற இந்தப் பாட்டு ஒரு கேள்வி உருவத்தில் இருக்கிறது. 'கடையேடு வந்து இனி என்செயுமே?' என்று கேட்பதற்கு விடை 'ஒன்றும் செய்யாது' என்பதுதான். அந்தக் கேள்வியிலே அதற்குரிய விடையும் குறிப்பாகப் பொருந்தியிருக்கிறது. தேவர்களும் மக்களும் அண்டர் குழாம் எப்போதும் முருகப் பெருமானைத் துதித்துக் கொண்டிருக்கிறது. உலகத்தில் உள்ளவர்கள் வாழ வேண்டுமென்று தேவர்கள் நினைக்கிறார்கள். உத்தியோகம் செய்கிறவனுக்குச் சம்பளம் கிடைத்தால்தான் அவன் வாழலாம். அவனுக்குச் சம்பளம் கிடைக்க வேண்டுமானால் மக்கள் வரி செலுத்த வேண்டும். அதனால் உத்தியோகஸ்தன் மற்றவர்கள் நன்றாக வாழவேண்டுமென்று நினைக்கிறான். இன்ஷாரன்ஸ்காரர் கள் இன்ஷாரன்ஸ் செய்தவர்கள் நெடுநாள் வாழ வேண்டு மென்று விரும்புவது இல்லையா? அதுபோல் தேவர்கள், உலகம் எல்லாம் நன்றாக வாழவேண்டுமென்று எண்ணுகிறார்கள். உலகம் வாழ்ந்தால்தான் அவர்களுக்கு அவி உணவும் புகழும் 1OC)