பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எமராசன் கடைஏடு வாங்கித் தரும் வள்ளல் முருகப் பெருமான். இந்தப் பிறவி யிலேயே இன்ப வாழ்வை அருளி, இந்த உடலும் நீங்கினவுடன் மோட்ச சாம்ராஜ்யத்தில் வாழ்வதற்குரிய உரிமையை எம்பெரு மான் அருள்வான். இந்த உலகத்தில் வாழும்போது மக்களுக்கு எத்தனையோ வகையான கவலை உண்டு. அவற்றால் துன்பமும் பயமும் உண்டாகும். எல்லாவற்றிலும் மேலானது காலபயம். தன்னுடைய அடியார்களுக்குக் காலபயம் இல்லாமல் செய்பவன் முருகன் என்பதைப் பொதுவகையில் இந்தப் பாட்டில் சொல்ல வருகிறார் அருணகிரியார். தேவர்கள் பெற்றது அண்டர் குழாம் முழுவதும் சேர்ந்து முருகப் பெருமானை, குமரா சரணம் சரணம் என்று துதித்தாலும், பிறவியைப் போக்கிக் கொள்ள வேண்டுமென்ற நினைவு அவர்களுக்கு இருப்பது இல்லை. முருகனுடைய வீரத்தை அவர்கள் பாராட்டுவார்கள். அழகைப் போற்றுவார்கள். கருணையைப் புகழ்வார்கள். குருடர் கள் யானையைப் பார்ப்பது போல அவர்கள் எம்பெருமானின் ஒவ்வொரு குணச் சிறப்பைப் பாராட்டி மகிழ்வார்கள். ஆனால் எல்லாவற்றுக்கும் மேலான பெருமையை அவர்கள் உணரமாட் டார்கள். எம்பெருமான் ஞான உபதேசம் செய்பவன், முத்தி ராஜ்யத்தைத் தருபவன், கால பயத்தை நீக்குபவன் என்ற நுட்ப மான உண்மையை அவர்கள் அறிவது இல்லை. அறிந்தாலும் அவற்றைப் பற்றிச் சிந்திப்பது இல்லை. தங்களுடைய பதவி தங்களுக்கு இருந்தால் போதும் என்ற அளவில் திருப்தி அடை கிறவர்கள் அவர்கள். ஆகையால் தமக்கு இடையூறாக வந்த சூரனைச் சங்கரித்ததே முருகப் பெருமான் தங்களுக்குச் செய்த பெரிய உபகாரம் என்று எண்ணி ஆறுதல் பெற்றார்கள். ஆறுமுகம் உலகத்தில் உள்ள பெரியவர்களோ அப்படி இருப்பது இல்லை. முருகப்பெருமானைத் தம்முடைய உள்ளத் தடத்தில் தியானித்து, சோதி வடிவாகக் காணவேண்டுமென்ற ஆர்வம் உள்ளவர்கள் அவர்கள். எம்பெருமானைத் தியானித்துத் தியானித்து அவனுடைய திருமுகம் ஆறும் தமக்குள்ளே கண்டு இன்புறு கிறார்கள் அவர்கள். 105