பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 எத்தனை விதமான செல்வங்கள் உலகத்தில் இருந்தாலும் அவை பயன்படுவது இல்லை. எல்லாச் செல்வத்திலும் சிறந்த செல்வம் ஆண்டவனுடைய திருவருள். அதனைப் பெறுவதற்குத் தவம் வேண்டும். ஆகவே அந்தத் தவமும் ஒருவகைச் செல் வந்தான். 'தபோதனம்' என்று தவத்தைச் சொல்வார்கள். ‘'வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும்”. என்பது திருக்குறள். பெறவேண்டிய செல்வங்கள் எல்லாவற்றை யும் அளிப்பது தவம். ஆதலின் தவம் ஈட்டுவதற்குரியது என்று திருவள்ளுவர் சொல்கிறார். அந்தத் தவமாகிய தனத்தைப் பெற்ற ஞானச் செல்வர்கள் முருகப் பெருமானை எண்ணி, தியானித்து அவனுடைய திருமுகம் ஆறையும் கண்டு களிக்கிறார்கள். ஆறு ஆதாரங்களிலும் இருக்கிற பெருமான் முருகன் என்பதைக் காட்டுவதற்காக அவன் ஆறுமுகம் படைத்திருக்கிறான். ஆறுவித மான சாஸ்திரங்களுக்கும் அவனே தலைவன். ஆறு மதங்களின் தலைவனாக இருப்பவனும் அவன்தான். வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு, மேல், கீழ் என்றிருக்கிற ஆறு திசைகளுக்கும் தலைவனாக, அந்தத் திசைகளை எல்லாம் பார்க்கின்ற முகங்கள் படைத்தவனாக, முருகன் விளங்குகிறான். சிவபெருமானுக்குரிய ஐந்து முகமும், அம்பிகையின் ஒரு முகமும் சேர்ந்து ஒருருவமாக இணைந்த திருக்கோலத்துடன் ஆறுமுக நாதன் எழுந்தருளுகிறான். இன்னும் அந்த ஆறு முகத்தினுடைய தத்துவத்தைப் பலபடி யாகச் சாத்திரங்கள் கூறுகின்றன. சரவணப் பூம்பொய்கையில் ஆறு குழந்தைகளாக விளையாடிக் கொண்டிருந்த பெருமானை, எம்பெருமாட்டி எழுந்தருளிக் கையினால் சேர்த்து அணைத்த போது ஒருருவமும், ஆறுமுகமும் உடைய குழந்தை ஆனான். அதனால் கந்தன் என்ற திருநாமம் உண்டாயிற்று. ஆறுமுகநாதனாகிய கந்தனை உள்ளத் தடத்தில் தியானிக்கிற பெரிய தவத்தை உடையவர்கள் அவனால் பெறும் பயன் இன்னது என்று இந்தப் பாட்டில் சொல்கிறார் அருணகிரியார். திருமுகம் ஆறும் காணுதல் ஆண்டவனுடைய திருக்கோயிலுக்குச் சென்று அவன் திருக் கோலத்தைப் புறக்கண்ணால் கண்டு களிக்கின்ற பெருமக்கள் 1OᏮ