பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எமராசன் கடைஏடு பலர். ஆனால் அதோடு நின்றுவிட்டால் தரிசனத்தின் பயன் நிறை வேறாது. இறைவனுடைய ஆறுமுகத்தையும் உள்ளத் தடத்தில் தியானித்துக் காண வேண்டும். நிதானமாகக் காண்கின்றவனுக்கு அந்த முகங்கள் ஒளிவிட்டு விளங்கும். உள்ளம் முழுவதும் ஒளி மயமாக இருந்தால் கவலை இராது. மெல்ல மெல்ல உள்ளத்தில் இருந்த பாரம் எல்லாம் போய்விடும். திருமுகம் ஆறும் கண்ட, தமராகி வைகும் தனியான ஞான தபோதனர்க்கு. ஞானத் தபோதனர் 'முருகப்பெருமானுடைய ஆறுமுக தத்துவத்தையும் நன்கு அறிந்து, அவற்றை உள்ளத் தடத்தில் கண்டு வாழும் பக்தர் களாகிய ஒப்பற்ற சிறப்புடைய ஞானத்தபோதனம் உடைய ர் கள் என்கிறார். ஞானத் தபோதனம் என்று சொல்லுவதில் ஒரு சிறப்பு உண்டு. தவம் இருவகைப்படும். தவம் ஒரு பயனை எண்ணிச் செய்வதும் உண்டு; பயன் இல்லாமல் செய்வதும் உண்டு. இராவணன், சூரபன்மன் முதலியவர்கள் பிறருக்குத் தீங்கு விளைவிக்கின்ற வலிமை தங்களுக்கு வரவேண்டுமென்று தவம் செய்தார்கள். அந்தத் தவம் நல்ல தவம் ஆகாது. இறைவன் அருளைப் பெற்று வாழவேண்டுமென்ற எண்ணத்தோடு செய் கின்ற நிஷ்காம்யமான தவத்தையே நற்றவம் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அத்தகைய தவம் செய்கிறவர்களே ஞானத் தபோதனர்கள். உலகத்தில் மனைவி, மக்கள், உறவினர்கள் என்று பற்றுக்கொண்டு வாழ்கிறவர்களைப் போல இல்லாமல் முருகப் பெருமானுடைய அடியார்கள் ஒரு குழாமாக இருப்பார்கள். அமராவதியில் பெருமாளைக் கண்ட தேவர்கள் குழாமாகக் கூடித் தாம் பெற்ற இன்பங்களுக்காக அவனை வாழ்த்துகிறார் கள். ஆனால் இந்தக் குழாத்தினரோ தமக்குள் ஒற்றுமைகொண்டு முருகனுடைய அடியார்கள் என்ற பொதுமையினால் ஒன்று கூடிச் சிறந்த செல்வர்களைப் போல மிடுக்குடன் இருப்பார்கள். அவர் களுக்கு எவ்விதமான கவலையும் இல்லை. அவர்கள் இங்கே கவலையற்ற நிலையில் இருப்பார்கள் என்பதை வைகும்’ என்ற சொல் காட்டுகிறது.