பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணக்கமும் வணக்கமும் திருமுகம் ஆறும் கண்ட தமர்களைப் பற்றி நினைத்தவுடன் அருணகிரிநாதப் பெருமானுக்கு அத்தகைய கூட்டத்தோடு சேராத வர்களின் நிலை நினைவுக்கு வருகிறது. வேறு யார் யாருடனோ இணங்கித் துன்புற்ற மக்களை எண்ணுகிற கருணையினால், தாமே அந்த நிலையைப் பெற்றவர் போல இரங்குகிறார். "நான் குணம் கெட்ட துட்டன்' என்று விண்ணப்பித்துக் கொள்கிறார். சேர்ந்து வாழ்தல் மனிதன் எப்போதும் கூட்டமாக வாழும் தன்மை உடை யவன். தன் உள்ளத்திற்குப் பொருந்திய மக்களோடு சேர்ந்து வாழ்வதற்கு அவனுக்கு வாய்ப்பு உண்டு. தனியாகப் பிறந்த மனிதன் முதலில் தாய் தந்தையுடன் வாழ்கிறான். பின்பு சகோதர சகோதரிகளுடன் வாழ்கிறான். அதன் பின்பு மனைவியைத் திருமணம் செய்துகொண்டு அவளோடு இல்லறம் நடத்துகிறான். அதன் விளைவாகக் குழந்தைகளைப் பெற்றுக் குடும்பத்தை நடத்துகிறான். மனைவி, மக்கள், சுற்றம் ஆகியவர்களோடு பேரன் பேத்திகளைப் பெறுகிறான். அவற்றால் அவனுடைய குடும்பமே பெரியது ஆகிவிடுகிறது. ஊரார், உற்றார் என்று அவன் பிறருடன் சேர்ந்து வாழ்கிறான். அவனுடைய நிலைமையும், தலைமையும் பெருகப் பெருக அவன் இணக்கம் கொள்ளும் மனித சமூகம் விரிகிறது. நாட்டில் உள்ள மக்களோடு இணங்கி வாழ்கிறவன் பெரிய தலைவனா கிறான். உலகம் முழுவதும் உள்ள மக்களோடு சேர்ந்து வாழ்கிற வன் மிகமிகப் பெரிய மனிதனாகிறான். சிலருக்குத் தம்முடைய சுற்றத்தார்களை மாத்திரம் தெரிந்துகொள்ளும் வாழ்க்கை இருக்கும். சிலர் உறவினர்களாலும், ஊரவர்களாலும் மதிக்கப்படுகிற நல்ல வர்களாக வாழ்கிறார்கள். அப்படியே நாட்டுக்குத் தலைவராக உள்ளவர்களை உலகத்தவர் பலர் தெரிந்து கொள்ளும் மேன்மை யும் இருக்கிறது.