பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணக்கமும் வணக்கமும் பயன்படுத்திக்கொள்வதில்லை. பயன்படுத்திக் கொள்ள வழி தெரியாவிட்டாலும் பயன்படுத்திக் கொள்ளும் நல்லவர்களைக் கண்டு நாம் செய்யலாம். சிறு குழந்தை உலகத்தினரைப் பார்த்து ஒவ்வொன்றாகப் பழக்கம் செய்து கொள்கிறது. ஒடுவதும், சாடுவதும், சிரிப்பதும், அழுவதும் ஆகிய எல்லாமே குழந்தை பிறரிடமிருந்து தெரிந்து கொள்பவைகளே. தாய் தந்தை உலகம் ஆகியவற்றோடு கலந்து மெல்ல மெல்லப் புதிய பழக்கங்களை உண்டாக்கிக் கொள்கிறது. ஆகவே அறிவை உடைய மனிதன் தனக்கு தெரியாவிட்டாலும் நல்லவர்களுடன் கலந்து நல்ல எண்ணங்களையும் நல்ல பேச்சையும் நல்ல செயல்களையும் தெரிந்து கொள்ளலாம். நல்லவர்களோடு இணங்குவது என்பது எளிதில் வருவது இல்லை. உலகில் பெரும்பாலும் தீயவர்களுடைய அரசாட்சி நிலவுகிறது. ஆகையால் தீயவர்களுடைய கூட்டத்திற்குள் புகுவது மிக எளிதாக இருக்கிறது. நாம் தீயவர்களை ஒதுக்கி, நல்ல வர்களைத் தேட வேண்டும். நன்மை என்பது பலவகைப்படும். அறம் செய்வது நன்மை; பொருள் ஈட்டுவது நன்மை; நல்ல முறையில் இன்பம் பெறுவதும் நன்மைதான். நம் வாழ்நாள் மிகக் குறுகியது என்பதை உணர்ந்து எல்லாவற்றிலும் சிறந்த நன்மை எது, அதனைப் பெறுவதற்குரிய வழி என்ன என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும். மிகச் சிறந்த நன்மை இறைவன் அருளைப் பெறுவதுதான். அந்த அருளைத் தருவதற்குரிய நாயக னாகிய ஆண்டவன் எப்போதும் இருக்கிறான்; எங்கும் இருக் கிறான். நாம் முயன்றால் அருள் தரமாட்டேன் என்று சொல்ல மாட்டான். - தீயோர் இணக்கம் னால் முயல்வதற்குரிய வழி தெரியாமல் நாம் திண்டாடு கிறோம். நம்முடைய இணக்கமெல்லாம் இறைவனைப் பற்றி எண்ணாதவர்களுடைய இணக்கமாக இருக்கிறது. ஏதோ சம்பிர தாயத்திற்காக, நாகரிகத்திற்காகக் கடவுள் என்று சொல்லிவிடு கிறவர்களோடு உறவு வைத்துக் கொண்டு வாழ்வதால் பயன் இல்லை. போகிற போக்கில் சூறைக் காற்று அடித்தது போல உள்ள அவர்களுடைய இணக்கம் நமக்கு நலம் தராது. நம் முடைய இயற்கை மாற வேண்டுமானால், குணங்கள் படிய 113