பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 வேண்டுமானால், முதலில் நாம் தீயவர்களுடன் இணங்கக் கூடாது. இறைவனை வணங்கித் துதிக்க அறிந்த மனிதர்களுடன் இணங்க வேண்டும். பெரும்பாலோருடைய நிலை அப்படி இல்லை. வணங்கத் தெரியும். துதிக்கத் தெரியும். ஆனால் கைமேல் பலன் தருகிற மக்களைத்தானே வணங்க வேண்டும், துதிக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். எல்லாச் செயலுக்கும் மூலகாரணனாக இருந்து எல்லாக் காரியங்களையும் நிறைவேற்றித் தருகிறவன் ஆண்டவன். தம்மால் புகழ்ந்து துதிப் பதற்குரியவன் அவன்தான் என்பதை அறிவாளிகள் எண்ணு கிறார்கள். மற்றவர்கள் எண்ணுவது இல்லை. சிறிய ஊதியம் உலகத்தில் சிறுசிறு லாபங்களில் மனத்தைப் போக்கி வாழ்கின்றவர்கள் இறைவனை வணங்குவது இல்லை; துதிப்பது இல்லை. ஓரிடத்தில் ஒரு பெரிய விருந்து நடக்க இருந்தது. விருந்தினர்களுக்குப் பரிமாறுவதற்காகப் பூந்தி பண்ணிக் குவித் திருந்தார்கள். அந்தப் பூந்தியில் எறும்பு வந்து மொய்த்துக் கொள்ளுமோ என்ற ஐயம் விருந்து செய்யும் தலைவருக்கு உண்டாயிற்று. உடனே அங்கே இருந்த ஒரு பெரியவர் ஒரு தந்திரம் செய்தார். இரண்டு விசைச் சர்க்கரையைக் கொண்டு வந்து பூந்திக் குவியலைச் சுற்றிச் சிறிது தூரம் விட்டு வட்டமாக மதில்போலத் தூவினார். எறும்புகள் வந்தன. அந்தச் சர்க்கரை மதிலிலேயே நின்று மொய்த்திருந்தன. அதைத் தாண்டிப் பூந்திக் குவியலுக்குப் போகவில்லை. பூந்தியாகிய பெரிய பயனைப் பெறாமல் சர்க்கரையாகிய சிறிய பயனைப் பெற்று நின்றுவிட்டன. பெரிய பயன் மனிதனும் அப்படித்தான் இருக்கிறான். தான் பெறுகிற புலனுகர்ச்சியைப் பெரிதென்று எண்ணி அதனோடு நின்றுவிடு கிறான். இன்னும் சிலர் அறிவினால் ஆராயும் ஆராய்ச்சியில் ஏற்படுகிற இன்பக் கிளுகிளுப்புக் கண்டு அதோடு நின்றுவிடு கிறார்கள். அவர்கள் எல்லாம் சின்ன எறும்பு இனத்தைச் சேர்ந்த வர்கள். இறைவன் அருள்பெற வேண்டும் என்ற ஆர்வத்துடன் அந்தத் துறையில் எண்ணியும் பேசியும் செயல் செய்தும் வாழ் கிறவர்களே சிறந்த நன்மையை அடைவார்கள். இறைவனை i 14