பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணக்கமும் வணக்கமும் வணங்கித் துதித்து அவனுடைய திருவருளைப் பெறுகிறவர்களே மனிதப் பிறவியில் பெறும் பெரிய பயனை அடைவார்கள். அத்தகைய மனிதர்களோடு இணங்க வேண்டுமென்று அறியாது, இறைவனை வணங்கித் துதிக்க அறியாதவரோடு இணங்கிப் பயன் இல்லை. இவர்களுடன் இணங்குவதால் நம்முடைய பழைய குணமும் கெட்டு, புதிய தீய குணமும் வந்து சேரும். நான் அத்தகைய துட்டனாக இருக்கிறேன்' என்று அருண கிரியார் சொல்கிறார். வணங்கித் துதிக்க அறியா மனிதருடன் இணங்கிக் குணங்கெட்ட துட்டனை ஈடேற்றுவாய். இறைவனை வணங்காமலும் துதிக்காமலும் இருக்கிறவர்கள் எத்தனை பெரிய மனிதர்களாக இருந்தாலும் அவர்களுடன் இணங்குவது கூடாது என்று குறிப்பாக இந்தப் பாட்டில் சொல் கிறார். நூல்களை எல்லாம் ஆராய்ந்திருந்தாலும், தத்துவங்களை அறிந்திருந்தாலும், பல பெரிய மனிதர்களை அறிந்திருந்தாலும், எத்தனை பண்பாடு இருந்தாலும், இறைவனுடைய அன்புப் பிணைப்பு இல்லாத இடத்து அவர்கள் திருமங்கல்யம் இல்லாத அழகியைப் போன்றோர் என்றே சொல்ல வேண்டும். "இந்த நிலையில் இருக்கிற என்னைக் காக்க வேண்டும்' என்று முருகப் பெருமானிடத்தில் விண்ணப்பம் செய்து கொள்கிறார் அருணகிரியார். நிர்மலன் L) லத்தின் சம்பந்தத்தினால் பலவிதமான துன்பங்களுக்கு உள்ளாகிறவர்களுடைய இடரைப் போக்குகிறவன் முருகன். அவன் நிர்மலன். "குணம் கெட்டதுட்டனாகிய என்னை, நிர்மலன் ஆகிய நீ ஈடேற்ற வேண்டும்' என்று விண்ணப்பம் செய்து கொள்கிறார். முருகப் பெருமான் தன்னுடைய திருக்கரத்தில் வேலாயுதத்தை வைத்திருக்கிறான். அது ஞானத்தின் அடையாளம் என்பதைப் பலமுறை பார்த்திருக்கிறோம். அது வெற்றிவேல்; விக்கிரம வேலாயுதம். வேல் புகுந்த இடத்தில் தோல்வி என்பது சிறிதும் இராது. நிர்மலன் ஆகிய முருகன் வேலாயுதத்தைப் பிர யோகம் செய்தான். அது வெற்றியைத் தந்தது. விக்ரம வேலாயுதம் தொட்ட நிர்மலனே. 115