பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணக்கமும் வணக்கமும் பிணங்கள் கிடப்பதனால் எங்கே பார்த்தாலும் பந்தல் போட்டது போலக் காக்கையும் கழுகும் இணைந்து பறக்கின்றன. இது மாத்திரமா? பேய்கள் சேர்ந்து கையைக் கோத்துக் கொண்டு ஆடுகின்றன. பேய்கள் வைரவருடைய சாபத்தால் உணவு இல்லாமல் வாடுபவை. உயிரோடு இருப்பவர்கள் உடலை உண்ணக் கூடாது என்பது அவர்களுக்கு இட்ட கட்டளை. ஆகை யால் எங்கேனும் போர்க்களம் உண்டானால் அந்தப் போரில் இறந்தவர்களை உண்பதற்காக அவை தேடிக்கொண்டிருக்கும். போர் நடக்கிறது என்றால் பேய்களுக்குத்தான் முதலில் கொண் டாட்டம். போர்க்களத்தில் பேய்கள் நடத்தும் பலவகையான ஆட்டத்தையும், பாட்டத்தையும் அருணகிரியார் முன்பும் சில பாடல்களில் சொல்லியிருக்கிறார். 'சளத்தில் பிணிபட்டு அசட்டு க்ரியைக்குள் தவிக்கும்என்ற ன் உளத்தில் ப்ரமத்தைத் தவிர்ப்பாய்; அவுணர் உரத்துஉதிரக் குளத்தில் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்துவெற்றிக் களத்தில் செருக்கிக் கழுதாட வேல்தொட்ட காவலனே' என்ற பாட்டை முன்பே பார்த்தோம். இங்கே அலகைகள் எல்லாம் துணங்கை ஆடுகின்றனவாம். துணங்கை என்பது கைகளைக் கோத்துக்கொண்டு சுற்றிச் சுற்றி ஆடுகிற ஆட்டம். போர்க்களத் தில் கிடந்த அசுரர்களுடைய உடல்களைத் தின்று வயிறு தடித்து ஆனந்தக் கூத்தாடுகின்றன. பலகாலம் பட்டினி கிடந்த நமக்குப் போதிய உணவு எங்கே கிடைக்கப் போகின்றது என்று வாடி நின்றவை அவை. இப்போது தம் அளவுக்கு மிஞ்சி விருந்து உண்டு துணங்கை ஆடுகின்றன. மேலே கொடியும், கழுகும் இணைந்து பந்தல் போட, அந்தப் பந்தலின் கீழே கைகோத்து நடமாடி முருகனை வாழ்த்துகின்றன. அந்தப் பேய்கள். திருமுருகாற்றுப் படையில் முருகன் சூரனோடு போர் செய்த தால் பேய்மகள் அடைந்த ஆனந்தத்தைச் சொல்கிறார் நக்கீரர். 'உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள் குருதிய ஆடிய கூர்உகிர்க் கொடுவிரல் கண்தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை ஒண்தொடித் தடக்கையின் ஏந்தி வெருவர வென்றடு விறல்களம் பாடித் தோள்பெயரா நினம்தின் வாயள் துணங்கை துங்க." க.சொ.v1-8 117