பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 கொடியும் கழுகும் தம்முள் போராடிப் பிணங்கிப் போட்டி போட்டு ஊனை ஈர்க்கின்றன. அலகைகள் தமக்கு வேண்டிய உணவை உண்டு கைகோத்து ஆடுகின்றன. இவ்வாறு அசுரர்கள் போர்க்களத்தில் படும்படியாக வெற்றிவேலைப் பிரயோகம் செய்தான் முருகப் பெருமான் துட்டர்களாகிய அசுரக் கூட்டங் களை வேலாயுதத்தால் அழித்து வெற்றி கண்ட நிர்மலனே, துட்டன் ஆகிய என்னை, என்பாலுள்ள தீய பண்புகளை எல்லாம் மாற்றி ஈடேற்ற வேண்டும் என்று இந்தப் பாட்டில் ஆண்ட வனை வேண்டிக் கொள்கிறார் அருணகிரியார். வணங்கித் துதிக்க அறியா மனித ருடன்இணங்கிக் குணங்கெட்ட துட்டனை ஈடேற்று வாய்கொடி யும்கழுகும் பிணங்கத் துணங்கை அலகைகொண் டாடப் பிசிதர்தம்வாய் நிணம்கக்க விக்ரம வேலா யுதம்தொட்ட நிர்மலனே. (உன்னை உடம்பால் வணங்கி வாயினால் புகழ அறியாத தீய மக்களுடன் நண்பனாகப் பொருந்திக் குணம் கெட்டுப்போன தீயவனாகிய அடியேனை நற்கதி அடையும்படி செய்தருள்வாய்: காக்கையும் கழுகும் ஒன்றனோடு ஒன்று போட்டி போடவும், பேய்கள் கை கோத்துத் துணங்கைக் கூத்து ஆடவும், ஊனுணவையுடைய அசுரர்களின் வாய்கள் நிணத்தைக் கக்கவும் வெற்றிவேற்படையை வீசிய மலமற்ற தூய பெருமானே! குணம்கெட்ட - நற்குணம் அழிந்த ஈடேற்றுதல் - தாழ்ந்த நிலை யினின்றும் உயர்த்துதல். கொடி - காக்கை. பிணங்க - சச்சரவிட, போட்டி போட. துணங்கை - ஒருவகைக் கூத்து; கைகோத்தாடுவது. அலகை - பேய். அலகை துணங்கை கொண்டு ஆட. பி.சிதம் - ஊன்; அதை உண்போர் பிசிதர். நிணம் - ஊன். விக்ரமம் - வெற்றி. தொட்ட - வீசிய.) இது கந்தர் அலங்காரத்தில் 88ஆவது பாட்டு