பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேலம் மாவட்டத்தைச் சார்ந்த ஆத்தூருக்கு அருகில் வடகுமரை என்ற சிற்றுர் இருக்கிறது. சில நூறு வீடுகளே உள்ள கிராமம் அது. அங்கே திருமால் கோயிலும் சிவன் கோயிலும் வயல்களை அடுத்து அருகருகே உள்ளன. சிவன் கோயிலுக்குள் ஒலைக் குடிசை ஒன்று இருக்கிறது. அதைக் குடிசை என்றும் சொல்லலாம்; பர்ணசாலை என்றும் சொல்லலாம். இரண்டும் ஒன்றையே குறித்தாலும் உள்ளே உறைபவர்களின் வேறுபாட்டை அவை தனித் தனியே குறிக்கின்றன. உள்ளே இருப்பவர் ஏழையானால் அதைக் குடிசையென்னலாம். முனிவராக இருந்தால் பர்ணசாலை என்று கூறலாம். அப்படிப் பார்த்தால் இது குடிசை அன்று; பர்ணசாலை. இதனுள்ளே ஒரு முனியுங்கவர் - சுவாமிகள் - வாழ்கின்றார். அவரை வட குமரைச் சுவாமிகள் என்றும், பூரீ அப்பண்ண சுவாமிகள் என்றும் வழங்குவார்கள். சுவாமிகள் என்று சொல்வதற்கு அவரிடம் தனி அடையாளம் ஏதும் இல்லை. கரிய ஒல்லியான திருவுருவம் இடையில் நாலு முழ வெள்ளைக் கதர் வேட்டி, மேலே ஒரு சிறு துண்டு. கிராமவாசிகளோடு சேர்ந்து நின்றிருந்தால் அவரை இனம் கண்டு கொள்ள முடியாது. ஆனால் அவருடைய கண்களைக் கண்டால் போதும்; “இந்த மனிதரிடம் ஏதோ இருக்கிறது' என்ற எண்ணம் உண்டாகும். அந்தக் கண்கள் அசாதாரணமான ஒளியை உடையவை. அவரோடு சிறிதே பேசத் தொடங்கினால் அவர் சிறிதும் 'பி.கு: இல்லாமல் எளிய குழந்தை போலப் பேசுவதைக் காணலாம். பேசிக்கொண்டே இருந்தால் அவர் படித்த நூல்களிலிருந்து பல செய்திகள் வரும். பழகின மனிதர்களைப் பற்றிய பேச்சு வரும். இவை முக்கியம் அல்ல; அநுபவமுள்ளவர்களே சொல்லத் தக்க பல மணியான வார்த்தைகள் வரும். - அவரைப் பார்க்க வந்தவர் பக்திமானாகவோ, ஞான நெறியில் நிற்பவராகவோ இருந்துவிட்டால், அவரிடமிருந்து வரும்