பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 உவகையுடன் படித்து இன்புற்று ஊக்கமூட்டுவார். பாம்பறியும் பாம்பின் கால்' என்பது போல அருளநுபவத் துறையிலே செல்கிறவர்களுக்கல்லவா அவற்றின் அருமைப்பாடு தெரியும்? முருகனைச் சோதிப்பிழம்பாகக் கண்டவர் அருணகிரிநாதர், கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாசாரியார், 'அருவமும் உருவு மாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப் பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகிக் கருணைகூர் முகங்க ளாறும் கரங்கள்பன் னிரண்டும் கொண்டே ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன் உலகம் உய்ய” என்று பாடுகிறார். சோதிப்பிழம்பு ஓர் மேனியாகி முருகனாக வந்ததாம். 'சோதி உணர்கின்ற வாழ்வு சிவமென்ற சோகம் அதுதந்து எனைஆள்வாய்” என்று அருணகிரியார் வேண்டுகிறார். 'ஒளியில் விளைந்த உயர்ஞான பூதரத் துச்சியின்மேல் அளியில் விளைந்ததோரானந்தத் தேனை என்பது அலங்காரம். ரீ ராமகிருஷ்ண பரம ஹம்ஸர் முதலிய வர்கள் இந்தச் சோதி வெள்ளத்தில் மூழ்கி உள்ளும் புறம்பும் சோதியுருவைத் தரிசித்து இன்புற்றவர்கள். பூரீ வடகுமரைச் சுவாமிகளும் சோதி வெள்ளத்திலே மிதப்பவர். அருணகிரியார் வாக்கில், "ஓங்காரத்துள்ளொளிக் குள்ளே முருகன் உருவம் கண்டு” என்று வருவதைக் கேட்டால் அவர் ஆனந்தக் கூத்தாடுவார். அநுபூதிமான்களின் அநுபவம் ஒத்திருக்கும் என்பதை அவர்களுடைய வாக்கிலிருந்து காணலாம். 'தூண்டு சுடரனைய சோதி கண்டாய்” என்று அப்பர் பாடினால், “சோதியே சுடரே 124