பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருணகிரிநாதப் பெருமானுடைய அருள்வாக்கில் ஈடுபட ஈடுபட அவர் சிறந்த அநுபூதிமான் என்பது நமக்கே புலனாகும். அவருடைய திருவாக்கு உள்ளத்திலே ஊறஊற ஏதோ ஒன்று உள்ளத்தைக் கிளுகிளுக்கச் செய்கிறது. முருகனுடைய திருவருள் அநுபவத்தை, முயன்றால் நாமும் பெறலாம் என்ற நம்பிக்கை உண்டாகிறது. நம்முடைய நிலைக்கு இறங்கி வந்து அந்தப் பேராளர் முருகனை இறைஞ்சி உருகி வேண்டிக்கொள்ளும் பாடல்களில் ஒன்றிவிட்டால் நமக்காகவே அந்தப் பாடல்கள் அமைந்தனவோ என்று தோன்றுகிறது. அருணகிரிநாதர் அநுபவம் பெற்ற காலம் வேறு, நிலை வேறு, நம்முடைய காலம் வேறு, நிலை வேறு என்ற எண்ணம் சிறிதும் தோன்றுவதில்லை. அந்தப் பெரியார் நம்முடன் இருந்து நம்மையும் முருகன் சந்நிதிக்கு அழைத்துச் சென்று நம்மையே வேண்டிக் கொள்ளச் சொன்னால் எப்படி இருக்கும்? அப்படி ஓர் உணர்ச்சி எழுகிறது, ஆம்; அவர் எல்லாக் காலத்துக்கும் பொது வாகவே பாடி வைத்திருக்கிறார். நமக்குக் காமம் இல்லையா? பொருளாசை இல்லையா? மனம் போன போக்கிலே செல்லும் இயல்பு இல்லையா? இவை மனிதன் உள்ள அளவும் இருப் பவை; உள்ள இடங்களிலெல்லாம் இருப்பவை. ஆதலால் நமக்கும் இந்த விண்ணப்பப் பாடல்கள் பொருத்தமாகவே இருக்கின்றன. இறைவனைப் பற்றிய பெருமையை எடுத்துச் சொல்லி அவன்பால் மதிப்பு உண்டாகும்படி சில பாடல்களை அருளியிருக் கிறார் அருணை முனிவர். குற்றங்களை எடுத்துச் சொல்லி, அவற்றைப் போக்கி ஆட்கொண்டருள வேண்டும் என்று சில பாடல்களில் விண்ணப்பம் செய்து கொள்கிறார். அவனுடைய திருவடிகளே புகலாகப் புகுகின்றார். அவனுடைய அருளினால் யமபயம் இல்லாமல் போகும் உண்மையைச் சொல்கிறார். மனிதன் இறைவனை அணுகிப் பக்தி செய்து மயல் நீங்கி மெய்யறிவு k