பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு விலங்கு வேத அறிவும், கலைமகளின் துணையும், திசைதோறும் உள்ள முகங்களும், எல்லாத் திக்குகளிலும் பார்வையைச் செலுத்தும் கண்களும் உடைய பெருமான் பிரமன். அவன் நடுநிலைமை யினின்றும் பிறழலாகாது. அவரவருக்குத் தக்க வண்ணம் அநுபவங் களை ஊட்ட வேண்டும். இதுதான் அவனுடைய கடமையாகும். தவறு செய்கிறவர்களுக்குத் தீங்கும், நலம் செய்பவர்களுக்கு நன்மையும் தருகிற அதிகாரியாகிய அவனே தவறு செய்து நடந்தானானால் அவனை ஒறுப்பதற்கு ஆண்டவன் வருவான். வரலாறு கந்தபுராணத்தில் ஒரு வரலாறு வருகிறது. பிரமன் முருகப் பெருமானைக் கவனிக்கவில்லை. எட்டுக் கண் இருந்தும் சின்னஞ் சிறு குழந்தையாக விளையாடிக்கொண்டிருக்கும் முருகனை அ பன் காணவில்லை. தலை தருக்கி நடந்தான். எல்லா இடங்க ையும் ஒரே சமயத்தில் பார்ப்பதற்குரிய கண்கள் இருந்தும், பாாக்க வேண்டியதைப் பார்த்து வணங்காது போனால் அவன் குருடன் அல்லவா? ஆகையால் முருகன் அவனை அழைத்து? 'நீ யார்?" என்று கேட்டான். அவன், தான் பெரிய அதிகாரம் வகிப்ப வனைப் போல, "சிருஷ்டி கர்த்தா என்று சொன்னான். "உனக்கு என்ன வரும்?' என்று முருகன் கேட்க, "வேதம் வரும்” என்று அவன் சொன்னான். முருகப் பெருமான், "வேதத்தைச் சொல்' என்று கேட்கப் பிரமன், 'ஓம்' என்று தொடங்கினான். உடனே, 'அதன் பொருள் என்ன?’ என்று முருகன் கேட்க, பிரமன் தெரியாமல் விழித்தான். - ༽༣༤ . கதையின் கருத்து இந்தக் கதையில் ஒரு சிறந்த உண்மை புலனாகிறது. கல்வி யிலே முற்ற வல்லவனாக இருப்பவன் பணிவு உடையவனாக இருந்தால்தான் தெளிவு பிறக்கும். நான் என்ற அகந்தை அவனுக்கு இருக்குமானால் அவன் பெற்ற கல்வியில் குழப்பம் உண்டாகும். அதுபோல் இங்கே பிரமன் தனக்குரிய அதிகாரத் தினால் தருக்கிப் பணிவின்றி நின்றான். வணங்குவதற்குரிய முருகனைக் கண்டும் வணங்கர்மல் இருந்தான். அவன் வேதத்தில் வல்லவனானாலும் தருக்கினால் தெளிவு பெறாமல் போனால் 1.39