பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு விலங்கு மற்றவர்களிடத்தில் தவறு செய்தாலும் முருகனோடு தொடர்பு உடையவர்களிடத்தில் நிச்சயமாகத் தவறு செய்யமாட்டான்' என்ற எண்ணம் உடையவர் அருணகிரியார். 'பிரமன் உங்களுடைய தலையில் எழுதியிருக்கிறான். மறுபடியும் உங்களுக்குப் பிறப்பு உண்டென்று தன்னுடைய பட்டோலையில் குறித்திருக்கிறான்' என்று ஒருவர் சொன்னதாக வைத்துக்கொள்வோம். அவரைப் பார்த்து அருணகிரியார் சொல் கிறார். 'அப்படியா? பிரமன் என் பெயரை எழுதினானா?” என்று கோபத்துடன் கேட்கிறார். அவருடைய கோபம் பிரமனைச் சுட்டுகின்ற முறையினால் தெரிகிறது. பங்கேருகன் யாராவது ஒருவரைப் பற்றிச் சிறப்பாகச் சொல்ல வந்தால் அவருடைய சிறப்புகளையே நாம் சொல்வோம். அவரை இழி வாகச் சொல்ல வேண்டுமானால் அவருடைய இழிவான இயல்பு களையே பெருக்கிப் பேசுவோம். அவன் இன்ன இழிவான இடத்தில் பிறந்தவன்; இன்ன இழிவான மனிதனுக்குப் பிறந்த வன்தானே?’ என்று பேசுவது உலக வழக்கு. அதுபோலவே முறை அறியாது காரியத்தைச் செய்த பிரமனை இங்கே, பங்கேருகன் என்று சொல்கிறார். பங்கேருகன் என்பதற்குத் தாமரையில் உள்ளவன் என்று பொருள். பங்கம் - சேறு. தாமரை சேற்றிலே முளைப்பதாதலின் பங்கேருகம் என்ற பெயரைப் பெற்றது. இங்கே பிரமனை, "பங்கேருகன்' என்றது. சேற்றிலே பிறந்த தாமரையில் இருக்கிறவன் அல்லவா?’ என்று இழிவு தொனிக் கும்படி அமைந்தது. சேற்றில் பிறந்த தாமரையில் இருக்கிறவன் குழம்பிய எண்ணத்துடன் இருப்பது இயல்புதான் என்ற குறிப்பு அந்தப் பெயரில் இருக்கிறது. 'அவன் என் பெயரைப் பட்டோ லையில் இடுவானா?" என்று கேட்கிறார் அருணகிரியார். அப்படி எழுதுவதாக இருந்தால் அவன் ஒழிந்தான் என்ற தைரியத்தோடு பேசுகிறார். பங்கேருகன் எனைப் பட்டோலையில் இடப் பண்டு தளை தன் காலில் இட்டது அறிந்திலனோ? i41