பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு விலங்கு 'தொட்டாரைச் சொல்லியழு தோள்விலங்கு போட்டு வைப்போம் கண்டாரைச் சொல்லியழு கால்விலங்கு பூட்டி வைப்போம்' என்று தாலாட்டுப் பாட்டில் வருகிறது. பழைய அநுபவத்தை மறந்து பிரமன் தவறு செய்தால் முன்னே கிடைத்த தண்டனையைப் போல இருமடங்கு தண்டனை அவனுக்குக் கிடைக்குமாம். முன்பு அவன் நடக்க முடியாமல் தளையிட்டான்; இப்போதோ நடக்கவும் முடியாமல், வேலை செய்யவும் முடியாமல் காலிலும், கையிலும் முருகன் விலங்கு பூட்டுவானாம். நான்முகனுக்கு இருவிலங்கே. நான்முகனுக்கு என்ற சொல்லில் ஒரு குறிப்பு உண்டு, நான்கு பக்கத்திலும் முகத்தை உடையவனாக இருந்தும், நடு நிலைமையில் நின்று எல்லாவற்றையும் பார்க்க வேண்டியவனாக இருந்தும், இப்படி உண்மையை உணராமல் செய்கிறானே என்ற குறிப்பை உடையது அது. அடுத்த பாட்டிலும், 'நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' என்று பிரமனை நான்முகன் என்று பேசுவார் அருணகிரியார். முருகப்பெருமானுடைய திருவருளால் பிறப்பு அற்றுப் போகும் என்பது இந்தப் பாட்டின் கருத்து. ★ பங்கே ருகன்.எனைப் பட்டோ லையில்இடப் பண்டுதளை தன்காலில் இட்டது அறிந்தில னோ?தனி வேல்எடுத்துப் பொங்கோதம் வாய்விடப் பொன்னஞ் சிலம்பு புலம்பவரும் எங்கோன் அறியின் இனிநான் முகனுக்கு இருவிலங்கே, 145