பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலாயிரம் கண் தரிசிக்க வேண்டுமென்ற ஆவலை வளர்த்துக் கொண்டிருந்தார் அருணகிரியார். ஒருமுறை அங்கே போய்ச் சேர்ந்தார். ஒரு பொருளிடத்தில் எத்தனைக்கு எத்தனை ஆசை மிகுகிறதோ அத்தனைக்கு அத்தனை அதன் மதிப்பு அதிகமாகும். மெல்ல மெல்லச் செங்குத்தான மலையின்மேல் அவர் ஏறிவிட்டார்; உச்சியை அடைந்தார். ஆண்டவனுடைய திருச்சந்நிதிக்குப் போகும்போது அவருடைய ஆர்வம் மிகுந்து குவிந்திருந்தது. அவருடைய ஆர்வமும், இயற்கையான அன்பும், ஆண்டவனுடைய தோற்றமும் எல்லாம் சேர்ந்து கொள்ளவே, அவருடைய கண்ணுக்கு ஒரு பெரிய பசி உண்டாயிற்று. அதனால் எம்பெருமான் சோதி வடிவினனாகத் தோன்றினான். அந்தக் காட்சியைக் கண்டவுடனே அவருக்கு அதுகாறும் உண்டாகாத பேரானந்தம் உண்டாயிற்று. 'இந் ப் பேரழகைக் காண்பதற்கு நமக்கு இரண்டு கண்கள் தா ம இருக்கின்றன? ஆயிரம் கண் இருந்தால் எவ்வளவு நன்றாகக் காணலாம்!' என்ற எண்ணம் உண்டாயிற்று. உடனே, 'எனக்கு இந்த உடம்பைத் தந்தவன் நான்முகன் அல்லவா? அந்த நான்முகன் எனக்கு நாலாயிரம் கண் படைத்திருக்கலாமே; அவ்வாறு படைக்கவில்லையே!' என்று இரங்கினார். நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே! என்று பாடினார். ஆலய தரிசனம் இறைவனைத் தரிசனம் செய்ய விரும்புகிறவர்கள் அவ னுடைய திருக் கோயிலுக்குச் சென்று, அவனுடைய உருவத்தைக் கண்டு வழிபடுகிறார்கள். கோயிலில் ஐந்து இந்திரியங்களுக்கு முரிய அநுபவப் பொருள்கள் பல உண்டு. இறைவனுடைய திருக் கோலத்தைக் கண்டு, அவனுடைய புகழை அடியார்கள் பாடக் கேட்டு, அங்கே உள்ள தூபப் பொருள்களின் மணத்தையும் அபிடேகச் சந்தன மணத்தையும் நுகர்ந்து, நல்ல நெய்யிட்டுச் செய்த பிரசாதத்தை உண்டு, ஐம்பொறிகளுக்குமுரிய இன்பத்தை அநுபவிக்கலாம். இத்தனையும் ஆண்டவனுடைய வழிபாட்டின் பகுதிகளே. ஆனாலும் ஆண்டவனைத் தரிசித்து வந்தேன் என்று சொல்வதே வழக்கம். மற்ற இந்திரியங்களுக்குரிய நுகர்ச்சியைப் க.சொ.Wi-10 i49