பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 பெற்றாலும் பெறாவிட்டாலும் கண்ணால் காணும் காட்சி மிகவும் தலைமையானது. கோயிலுக்குச் செல்லாமலே பிரசாதத்தை வாங்கிச் சாப்பிடலாம். தூபப் பொருள்களை நுகரலாம். திருப் புகழைக் கேட்கலாம். ஆண்டவனைக் கண்ணால் 571 வேண்டு மென்றால் திருக் கோயிலுக்குச் செல்லத்தான் வேண்டும். ஆண்டவனைத் திருக்கோயிலிலே கண்டு இன்புற்று வருவதுதான் மிகவும் முக்கியமானது. ஆலய வழிபாடு என்பது தரிசனத்தையே தலைமையாகக் கொண்டது. கண்ணாற் காணுதல் நம்முடைய உடம்பில் பத்துக் கருவிகள் இருக்கின்றன. செயல் செய்யும் கருவிகள் ஐந்தும், நுகர்ச்சிக்குரிய கருவிகள் ஐந்துமாகும். முன்னவற்றைக் கர்மேந்திரியங்கள் என்றும், பின்ன வற்றை ஞானேந்திரியங்கள் என்றும் சொல்வார்கள். செயல் செய்யும் கருவிகளாகிய கை, கால், நாக்கு, எருவாய், கருவாய் என்னும் ஐந்தையும்விட அறிவுக் கருவிகளாகிய ஞானேந்திரியங்கள் சிறந் தவை. அவை கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என்பன. இந்த ஐந்திலும் கண் தலைமையானது. "சர்வேந்திரியானாம் நயனம் பிரதானம்' என்று சொல்வார்கள். மனிதனுக்குப் பிற இந்திரியங் கள் அவ்வளவு சிறப்பாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் கண் இல்லாவிட்டால் பயன் இல்லை. 'கண்ணிற் சிறந்த உறுப்பு இல்லை” என்று பாடுவர் புலவர். திருக்குறளில், 'கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை' என்று வருகிறது. இறைவனை உடம்பினால் வழிபாடு செய்ய வேண்டுமென்ற கருத்தை அதில் வள்ளுவர் சொல்கிறார். அதற்கு உரை எழுத வந்த பரிமேலழகர், ‘காணாத கண் முதலியன போல வணங்காத தலைகள் பயனிலவெனத் தலைமேல் வைத்துக் கூறினார் என்று எழுதியுள்ளார். ஆதலின் பொறிகளுக்குள் சிறந்தது கண் என்றும் அதனால் இறைவனைக் காண்பதே பெரும்பயன் என்றும் தெரிய வருகிறது. ஒருவனுடைய கண் அழகாக இருந்தால் அவனுடைய திருமேனிக்கே அழகு அமையும். பிறர் பார்க்க அழகாக இருக்கும் 二5○