பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலாயிரம் கண் கண் வேறு. பிறரைப் பார்க்கும் ஆற்றலையுடைய கண் வேறு. இரண்டையும் படைத்திருந்தால் சிறப்பு உண்டாகும். கண்ணால் பார்க்கின்ற பொருள்களுக்குள்ள சிறப்பை எண்ணி அந்தப் பார்வைக்குச் சிறப்பு அமைகிறது. கண்வலி உடையவர்கள் பச்சை யான பொருள்களைப் பார்க்க வேண்டுமென்று சொல்வார்கள். காணத் தகாத விபரீதமான காட்சியைக் கண்டவர்கள் உடனே பச்சை மரத்தைக் காணவேண்டுமென்று சொல்வது உண்டு. ஆகவே கண்களால் பார்ப்பதற்குச் சிறந்தவை என்று பல பொருள்கள் உண்டு. அவற்றுள் மிகச் சிறந்தது ஆண்டவனுடைய திருவுருவம். இறைவன் தனக்கென்று உருவமும், குணமும் இல்லாதவன். ஆனால் அவன் ஆருயிர்களைக் காப்பாற்ற வேண்டுமென்ற பெரும் கருணை உடையவன். அவர்களை எல்லாம் தீங்கு அகற்றி நல்ல் நிலையில் வைக்க வேண்டுமென்ற கருணை அவனுக்கு இருக்கிறது. அவனோடு நாம் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டுமானால் அவன் நம் கண்ணுக்குப் புலனாகாமல் அறிவுக்குப் புலனாகாமல் இருந்தால் இயலாது. ஆதலின் நமக்கு அருள் செய்ய வேண்டித் திவ்யமங்கள உருவம் படைத்து எழுந்தருளுகிறான். மிகச் சிறந்த அன்பர்களுடைய உள்ளத்திலே தன்னுடைய திருவுருவத்தைத் தோற்றுவிக்கிறான். அருள் கண்ணால் பார்க்கின்ற அந்தப் பெரியவர்கள் தாம் கண்டவற்றை மற்றவர்களுக்குச் சொல்கிறார்கள். குறியும் குணமும் ஆகமங்களும், சாத்திரங்களும் அந்தப் பெருமானுடைய திருவுருவத்தைச் சொல்கின்றன. அவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு இறைவனுடைய திருக்கோலங்களைக் கல்லாலும் செம்பாலும் செய்து வைத்துக் கோயிலில் பூசிக்கிறார்கள். மந்திரங்களால் அவற்றுக்குத் தெய்வத் தன்மையை ஏற்றுகிறார் கள். பலவகை வழிபாடுகளைச் செய்கிறார்கள். மூலமூர்த்தி யோடு பல்வேறு மூர்த்திகளையும் திருவிழாவுக்குரிய உற்சவ மூர்த்திகளாக அமைக்கிறார்கள். மனிதன் கண்ணுடையவனாக இருப்பதால் அந்தக் கண்ணால் காண்பதற்காக இத்தனை கோலங் களையும் அமைத்திருக்கிறார்கள். தனக்கென்று குணம் இல்லாத ஆண்டவன் மூன்று குணங்களின் வசப்பட்ட ஆத்மாக்களைக் 151