பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலாயிரம் கண் மலையும். இறைவனைத் தொழும்போது, எனக்கு வேறு செய லில்லை என்பதற்கு அடையாளமாக இரண்டு கைகளையும் குவிக்கிறோம். அந்த இரண்டுமே செயலின்றிக் குவியும்போது வேறு கைகள் எதற்கு? ஆனால் முருகனுடைய அழகோ காணக் காண விரிவது; எல்லை காண ஒண்ணாதது. "அண்ணலார் குமரன் மேனி அடிமுதல் முடியின் காறும் எண்ணிலா ஊழி காலம் எத்திறம் நோக்கி னாலும் கண்ணினால் அடங்காது' என்பது கந்தபுராணம். ஆகவேதான், 'நாலாயிரம் கண் படைத் திலனே' என்று கண்ணை மாத்திரம் சொன்னார். நாலாயிரம் கண்கள் பொதுவாக எதைப்பற்றிச் சொன்னாலும் ஆயிரம் என்று சொல்வது வழக்கு. அவ்வாறு இங்கே ஆயிரம் கண் படைத் திலனே என்று சொல்லியிருக்கலாம். ஆனால், நாலாயிரம் கண் படைத்திலனே என்று சொல்கிறார் அருணகிரியார். அதற்கு என்ன பொருத்தம் என்பதைப் பார்க்கலாம். கண்களைப் படைகிறவன் பிரமன். அவனை, நான்முகன் என்று சொல்கிறார் அருணகிரியார். இவர் திருச் செங்கோட்டுக்குச் செல்வார். அங்கே முருகப்பெருமானைக் காண்பார். அவன் பேரழகில் ஈடுபடுவார். அப்போது இவர் முகத்தில் ஆயிரம் கண்கள் இருந்தால் நன்றாக இருக்கும், என்று முன்பே எண்ணிப் பிரமன் படைத்திருக்கலாம். இந்த எண்ணத்துடன் அவன் விரிவாகப் படைக்கப் புகுந்தால் ஒவ்வொரு முகமும் அதற்கேற்ற இரண்டு கண்களும் வேலை செய்யத் தொடங்கும். ஒவ்வொரு முகப் பக்கமும் ஆயிரம் கண்களைப் படைத்தால் நான்முகங்களி னாலும் விரைவாகப் படைக்கின்ற அவன் நாலாயிரம் கண் களைப் படைத்திருக்கலாமே என்ற நினைவோடு சொல்கிறார். ஒரு முகம் இரண்டு கைகளோடு அவன் படைப்பதாக இருந்தால் ஆயிரம் கண் வைக்க முடியும்; நான்கு முகத்தையும், எட்டுக் கரங்களையும் கொண்டு விரைவாக அவன் படைக்கப் புகுந்தால் 3.63