பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சால நன்று திருச்செங்கோட்டில் எழுந்தருளியிருக்கும் முருகனுடைய பேரழகைக் கண்டு அதில் ஈடுபட்ட அருணகிரிநாதர், "நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே என்று சென்ற பாட்டில் குறைபட்டுக் கொண்டதைக் கண்டோம். இன்னும் அவருக்குத் திருச்செங்கோட்டின் நினைவு போக வில்லை. தொடர்ந்து அங்குள்ள பெருமானையே நினைக்கிறார். நாலாயிரம் கண் இல்லை என்பதற்காக அவனுடைய அழகைக் காணாது வந்துவிடுவாரா? கிடைத்ததைக் கொண்டு முழுப் பயன் பெறுவதுதான் அறிவாளியின் இயற்கை. ஆதலின் செங்கோடனை நன்றாகக் கண்டு இன்புற்றார். அவனுடைய திருவுருவம் அவரது உள்ளத்தில் பதிந்தது. நினைத்தல் நமக்கும் இறைவனைத் தரிசிக்க வேண்டுமென்ற ஆவல் இருக்கிறது. ஏதேனும் ஒரு தலத்திற்குச் செல்கிறோம். சென்று அவனைக் காண்கிறோம். அவனுடைய அற்புதமான கோலத்தில் மனத்தை ஈடுபடுத்துகிறோம். உலக வாழ்வில் பல முயற்சி களைக் கவனிக்க வேண்டி இருப்பதனால் எப்போதுமே அவனுடைய திருச்சந்நிதானத்தில் இருக்க நம்மால் முடியாது. ஆதலின் கோயிலுக்குக் குறிப்பிட்ட நேரங்களில் சென்று தரிசித்து வருவதே பக்தர்களுடைய வழக்கமாக இருக்கிறது. ஆனாலும் அப்படித் தரிசித்த பெருமானை நாம் எப்போது வேண்டுமா னாலும், எந்த இடத்திலும் மனத்தில் நினைக்கலாம். பலகாலும் தரிசித்த பழக்கத்தால் நம்முடைய உள்ளத்தையே கோயிலாக அமைத்துக் கொண்டுவிடலாம். 'செங்கோடைக் குமரன்என எங்கே நினைப்பினும் அங்கே என் முன்வந்து எதிர்நிற்பனே'