பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 கிறார்கள். அந்தக் கோயில் சில சில காலங்களில்தான் சென்று வழிபடுவதற்குரியது. அதற்கென்று ஒரு காலமும், இடமும் அமைந் திருக்கின்றன. எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் அவன் திரு வுருவத்தைக் கண்ணால் கண்டு தரிசிப்பது இயலாது. நம்முடைய வீட்டில் பூசை செய்வதற்கு வைத்திருந்தாலும் அதையும் ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் வைத்துக்கொள்ள முடியும். நாம் வேறு இடங்களுக்குச் சென்றிருந்தால் அந்த இடங்களில் அதைக் காண்பதற்கு வாய்ப்பு இராது. இறைவனுடைய திருநாமம் அத்தகையது அன்று. எல்லா இடத்திலும், எல்லாக் காலத்திலும் அதைச் சொல்லலாம்; அவன் புகழை வாழ்த்தலாம். எப்போது எப்போது நமக்கு ஒய்வு இருக்கிறதோ அப்போதெல்லாம் திரு நாமத்தைச் சொல்லலாம்; திருப்புகழைப் பாடலாம். ஆகையால் அவனுடைய திருவுருவத்தைத் தரிசிப்பதைவிட அவன் புகழை வாழ்த்துவது எளிதானது; பயனும் உடையது. வாழ்த்துதல் "நாலாயிரம் கண் இருந்தால் ஒருவாறு திருச்செங்கோட்டுப் பெருமானுடைய பேரழகைக் கண்டு இன்புற்றிருக்கலாமே. எனக்கு இருப்பவை இரண்டு கண்கள் தாமே!" என்று இரங்கினார் அருணகிரியார். ஆயினும் நன்றாகத் தரிசித்து இன்புற்றார். நாமோ அவனைச் சென்று பார்க்கவில்லை. எல்லாருக்கும் அடிக்கடி சென்று பார்க்க இயலாது. கோயிலுக்குச் சென்று பார்க்க முயற்சியும், வாய்ப்பும் இல்லாதவர்களுக்கு எளிதாக ஒரு காரியம் இருக்கிறது. அவனை வாழ்த்தலாம். திருச்செங்கோட்டி லுள்ள ஆண்டவனைத் தரிசித்த அருணகிரியார், யாவர்க்கும் எளியதாக, ஆனால் அரிய பயனை உடையதாக ஒர் உபாயத்தைச் சொல்கிறார். அவர் பாடிய பாடலைக் கேட்டுவிட்டு, 'நாலாயிரங் கண் இல்லையே என்று இப்பெருமான் இரங்குகிறாரே! அத்தகைய மூர்த்தியை நாம் பார்க்க வேண்டும். பார்க்க வாய்ப்பு இல்லையே!” என்று எண்ணி ஏங்குவாருக்கு ஆறுதலாக, 'அவனை வாழ்த்திக் கொண்டிருக்கலாம். அது மிகவும் நல்லது என்று அடுத்த பாட்டில் சொல்கிறார். செங்கோடனை வாழ்த்துகை சால நன்றே. 168