பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சால நன்று பரிபாடலில் முருகனைப் பற்றிய பல பாடல்கள் உண்டு. திருப்பரங்கு ன்றத்தில் எழுந்தருளியிருக்கும் பெரு மான் பெருமையைச் சொல்கிற பாடல்களில் ஒன்று, வள்ளி நாயகியின் திருமணப் பெருமையைச் சொல்கிறது. அது இப்போதுள்ள பரிபாடல் பதிப்பில் 9-ஆவது பாடலாக அமைந்திருக்கிறது. அந்தப் பாடலில் ஒரு காட்சி வருகிறது. பரிபாடலுக்கு உரை வகுத்த பரிமேலழகர் அங்கே, கைகோள் இரண்டிற்கும் உரிய தேவியார் காதலிக்கப் பாடு கூறி வாழ்த்தி, மேல் வள்ளியது சிறப்பும் அவன் பரங்குன்று அவட்கு ஒத்தவாறும் கூறலுறுவார், நான்மறைப் புலவரை நோக்கித் தமிழது சிறப்புக் கூறுவாராய்ப் பொதுவகையான் அவற்றிற்குக் காரணம் கூறுகின்றார் என்று முன்னுரை எழுதுகிறார். நான்மறை வல்ல புலவருக்குப் பிரமம் முதலிய எட்டுவகைத் திருமணங்கள் தெரியும். அவற்றில் ஒன்று காந்தர்வ விவாகம். அது போன்றது களவு மணம் என்று சொல்வார்கள். காந்தர்வ மணத்தைவிடக் களவு மணம் பலவகையில் சிறந்தது. களவு மணத்தின் சிறப்பை உணராத நான்மறைப் புலவர்களுக்கு அதன் பெருமையை உணர்த்தும் வகையில் பரிபாடற் பாட்டு இருக்கிறது. களவு மணம் செய்து கொள்பவர்கள் பின்பு நாடறிய வரைந்து கொண்டு கற்பு வாழ்க்கை வாழ்வார்கள். அதைக் களவின் வழிவந்த கற்பு என்பார்கள். அவ்வாறு இன்றி நேரே திருமணம் செய்து கொள்வதைக் களவின் வழி வாராக் கற்பு என்பர். இவ்விரண்டினும் முன்னையது சிறந்தது என்பது தமிழ் மரபு. இதை முதலில் புலவர் சொல்கிறார். 'நான்மறை விரித்து நல்லிசை விளக்கும் வாய்மொழிப் புலவீர், கேண்மின்; சிறந்தது காதற் காமம்; காமத்துச் சிறந்தது, விருப்போர் ஒத்து மெய்யுறு புணர்ச்சி.” 'நான்கு வேதங்களை விரித்து அதன் நல்ல் இசையை விளக்குகின்ற வாய்மொழியை உடைய புலவர்களே, கேளுங்கள்; இருவகைக் காமத்திற் சிறந்தது களவுக் காதலாகிய காதற் காமம். அது காதலர்கள் தம்முள் உள்ளம் ஒத்து ஒன்றுபடுவது' என்பது இதன் பொருள். 且了3