பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 அந்தக் காலத்தில் அது ஆக்கத்தைத் தந்தது. இப்போதோ ஒரு சாதி மற்றொரு சாதியைப் பகைக்கிற அழிவு முறை வந்துவிட்டது. பழங்காலத்தில் அந்த அந்தச் சாதிக் கூட்டத்துக்கு என்றே தனி வீதிகள் அமைந்திருக்கும். தொழிலாளியின் மகன் தொழிலாளி யாக இருந்ததனால் அவனுடைய வாழ்க்கையில் மாற்றங்கள் அமைவது இல்லை. பரம்பரை பரம்பரையாக அவனுக்கு என்று தொழிலும், அந்தத் தொழிலுக்குரிய நன்மைகளை அநுபவிக்கின்ற உரிமையும் இருந்தன. பொதுவான காரியங்களில் எல்லாச் சாதியினரும் பங்கு கொண்டு உழைத்தார்கள். ஊரிலுள்ள கோயி லில் விழா எடுக்க வேண்டுமானால் ஒவ்வொரு சாதியினருக்கும் வரையறையாக ஒரு தொண்டு இருக்கும். அதனை அவர்கள் பரம்பரை பரம்பரையாகச் செய்து கொண்டு வருவார்கள். வெவ் வேறு சாதியாக இருந்தாலும் எல்லோருக்கும் கோயிலில் உரிமை யுண்டு என்ற பெருமையுடன் வாழ்ந்தார்கள். வேற்றுமையில் ஒற்றுமை (Unity in diversity) என்ற இந்த முறை அந்தக் காலத்துச் சமுதாயத்தில் இருந்து வந்தது. உடம்பில் வெவ்வேறு அவயவங்கள் இருப்பதனால் பல வகையான தொழில்களைச் செய்வதற்குரிய வாய்ப்பு நமக்குக் கிடைப்பது போல, சமுதாயத்தில் வெவ்வேறு பிரிவுகள் ஒற்றுமை யோடு வாழ்கின்ற வாழ்வு இருந்தமையினால் நல்ல காரியங் களைச் செய்ய முடிந்தது. இப்போது ஓர் உறுப்புக்கும், மற்றோர் உறுப்புக்கும் சண்டை வந்ததுபோலச் சாதிக்குச் சாதி பகை தோன்றினமையின் சாதியே வேண்டாம் என்ற எண்ணம் தோன்று கிறது. மேல் சாதி, கீழ்ச்சாதி என்ற வேறுபாடு வந்ததே இதற்கு முக்கியமான காரணம். பழங்காலத்தில் நான் இன்ன வகுப்பு என்று எண்ணுவதில் எல்லோரும் பெருமை கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு வகுப் பினரும் தம் வகுப்புக்கு மூலமாக ஏதாவது ஒரு கடவுளைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பழங்க்ாலத்தில் ஒவ்வொரு வகுப்புக்கும் தனிச் சங்கம் இருந்தது. ஒவ்வொரு வகுப்புக்கும் தனியே ஒரு பெயர் உண்டு. கைக்கோளர்கள் என்னும் சாதியினர் முருகப் பெருமானுடைய தம்பியாகிய வீரபாகுவின் குலத்தவர் என்று சொல்லிக் கொள்வார்கள். தோல் தைப்பவர்கள் தங்களை அருந்ததியின் குலத்தவர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள். 18O