பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டையம் புண்டரிகம் 1 நீர் வேட்டவன் நெடுநாள் பல இடங்களுக்கும் அலைந்து விடாய்த்தவன் ஒருவன் போன இடங்களிலெல்லாம் நல்ல தண்ணிர் கிடைக்கா மல் மிகவும் துன்புற்றான். அழுக்கான புனலும், உப்பான புனலும், நாற்றமான புனலும் அவனுக்கு அகப்பட்டனவேயன்றி, தூய தண்ணீர் அவனுக்குக் கிடைக்கவே இல்லை. நல்ல தண்ணிர் எங்கே கிடைக்கும் என்று அவன் நாடித் தேடிக் கொண்டே இருந்தான். யாரோ ஒருவன் அந்தப் பக்கத்திலே நல்ல தண்ணிர் இல்லையென்றும், நெடுந்துரம் சென்றால் குறிப்பிட்ட ஓரிடத் தில் தெளிவான பொய்கையில் நல்ல தண்ணிர் கிடைக்கும் என்றும் சொன்னான். உணவு கிடைப்பதைவிட நீர் கிடைப்பது அவனுக்கு அரிதாக இருந்தது. அதனால் எப்படியாவது அந்தப் பொய்கையை அடைந்துவிட வேண்டுமென்று அவன் முயற்சி செய்தான். அந்தப் பொய்கை இருக்கும் இடத்தைத் தேடிச் சென்றான். அதைப் பற்றிச் சொல்வார்கள் யாரேனும் இருந்தால் இன்னும் விளக்கமாக அவர்களிடம் அந்த வழியைக் கேட்டுத் தேடிச் சென்றான். அவன் தன் எண்ணத்தில் அந்தப் பொய்கையைப் பற்றிய கற்பனைகளை எல்லாம் சேர்த்துக் கொண்டான். யாரே னும் அங்கே போய்த் தண்ணீர் கொண்டு வந்திருந்தால் அவரிடம் சில மணி நேரம் உட்கார்ந்து அந்தப் பொய்கையைப் பற்றிய வருணனைகளைக் கேட்டான். அந்தத் தண்ணீர் தேன்போல இருக்கும் என்றும், மிகவும் குளிர்ந்து இருக்கும் என்றும், உண் டால் பல காலம் தாகமே எடுக்காத வகையில் அது நலம் செய்யும் என்றும் அவர்கள் சொன்னார்கள். இப்படி அன்பர்கள் சொல்லச் சொல்ல அவனுக்கு மேலும் ஆசை வளர்ந்துகொண்டே வந்தது. முயற்சியும் அதிகமாயிற்று.