பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 கண்டு, “ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? இதனாற் பயன் ஒன்றும் இல்லையே! இறைவன்பால் அன்பு செய்யுங்கள்" என்று சொல் வதாக அமைந்திருக்கும். 'காயிலை தின்றும் கானில் உறைந்தும் கதிதேடித் - தீயிடைநின்றும் பூவலம் வந்தும் திரிவீர்காள் தாயினும் அன்பன் பூமகள் நண்பன் தடநாகப் பாயல் முகுந்தன் கோயில் அரங்கம் Lങ്ങിuor് என்பது திருவரங்கக் கலம்பகம். இப்படியே பிற கலம்பகங் களிலும் வருவதைக் காணலாம். இந்தப் பாட்டைக் கொண்டு யோகம் என்பதே வெறுப்பதற் குரியது என்று கொள்ளக்கூடாது. யோகம் புரிவது மிகவும் அருமை யான செயல். அதில் ஈடுபட்டு வெற்றி பெற்றவர் மிகமிகச் சிலர். வெற்றி பெறாது தடுமாறினவர்களே பலர். ஆதலின் அந்தப் பெரும்பான்மையினரின் நிலையைக் கண்டு இரங்கிச் சொன்ன பாடல்கள் இவை போன்றவை. ஐந்தாவது பாடலும் ஆறாவது பாடலும், முருகனை நம்பி வழிபட்டவர்களுக்கு யமபயம் இல்லை என்பதை உணர்த்துபவை. முதற்பாட்டில் தமக்கு யமபயம் இல்லையென்று சொன்னவர், அடுத்த பாட்டில் முருகனுடைய தரிசனத்தைப் பெற்ற அன்பர்கள் அனைவருக்குமே அப்பயம் இராதென்று கூறுகிறார். ஏழாவது பாடல் குணம் கெட்ட துட்டனை ஈடேற்றுவாய்' என்று வேண்டிக்கொள்ளும் உருவத்தில் இருப்பது. குணம் கெட்ட துட்டர்களாகிய நமக்காக அருணை வள்ளல் தம்மை அப்படிக் கூறிக் கொள்கிறார். இந்த ஏழு பாடல்களில் முருகனைப் பற்றிய செய்திகள் பல வருகின்றன. அவன் தாளிணையும், அச்சிற்றடியில் பூங்கழலும், அங்கே இடும் கடம்ப மலரும், அவனுடைய திருமுகம் ஆறும் காட்சி தருகின்றன. அவனுடைய கலாபப் புரவியையும், தனி வேலையும், சுடர்க்குடுமிக் காலாயுதக் கொடியையும் காண்கிறோம். 6