பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 தியானித்து, வாயினால் அவன் திருப்புகழை ஒதி, உடம்பினால் அவன் திருக்கோயிலை வலம் செய்து வாழ்க்கை நடத்துகிறவர் கள் அவர்கள். அவர்கள் அங்கங்கள் எல்லாம் பயன்படும்படி ஆண்டவன் அங்கங்களை மேற்கொண்டு வருகிறான். அவர்கள் கண் காணத் திருவுருவத்தை எடுத்துக் கொண்டு வருகிறான். கோயில்களிலுள்ள மூர்த்தியாக அவன் எழுந்தருளியிருக்கிறான். அந்தக் கோயிலைச் சென்று அடைந்து அவனுடைய திரு வுருவத்தை ஆசையோடு காண்கிறார்கள் தொண்டர்கள். அப்படிக் காணும் திருவுருவத்தில் அவர்கள் மிக்க காதலோடு காணுகின்ற பகுதி அவனுடைய திருவடி. அதைக் கண்டு கண்டு மெல்ல மெல்ல நெருங்குகிறார்கள். நெடுந்துரத்திலே முருகப் பெருமானுடைய திருவுருவப் பேரெழிலைக் கண்டு பின்பு அவனை அணுகி, அவனுடைய திருவடியை நன்கு கண்டு மொள்ளுகிறார்கள். அவன் எழிலை மொண்டு இன்புறுகிறார்கள். அநுபவத்தைப் பெறுகிறார்கள். கண் காண்பதற்கும், ஆவல் அண்டுவதற்கும், கருத்து மொள்ளு வதற்கும், உயிர் உண்பதற்கும் கருவியாக விளங்குகின்றன. நாம் ஆண்டவனுடைய கோயிலுக்குச் சென்று காணும் அளவில் நிற் கிறோம். நெருங்குவதும் இல்லை. உடம்பினால் நெருங்குவது அன்று; மனத்தினால் நெருங்குவது. ஒரு பொருளை நாம் நெருங்கி விட்டால் அதையன்றி வேறு எதனிடமும் சாரமாட்டோம். வேறு ஒன்றும் நம்மை அண்டாது. பிறவற்றில் நம் காட்சியோ ஆசையோ செல்லாது. காணுவது முதல் படி அணுகுவது இரண்டாவது படி. இலையில் உட்காராமல் சுற்றிக் கொண்டிருந்தால் அதில் உள்ள உணவை உண்ண முடியாது. அந்த இலைக்கு அருகில் உட்கார வேண்டும். இறைவன் திருவடியைக் கண்டு மகிழ்வது வேறு. அண்டி மகிழ்வது வேறு. மற்றவற்றையெல்லாம் மறந்து அந்தத் திருவடி யின் பேரெழிலில் மனத்தை லயிக்க விட்டுப் பிறிதொன்றையும் காணாத நிலையில் நிற்பதுதான் அண்டி நிற்றல். பின்பு அதனை மொண்டு நிற்க வேண்டும். மொள்ளுவது என்றால் எந்தப் பொரு ளால் மொள்ளுகிறோமோ அது நிரம்புவது. கண்ணும் கருத்தும் நிரம்பும்படியாக நம்முடைய பக்தி இருந்தால் அப்போது மொண்டவர்கள் ஆவோம். குடத்திலே பொய்கை நீரை எடுத்து i838