பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டையம் புண்டரிகம் பெற்று உறுதியாகச் சிந்தை மட்டும் தொழிற்பட்டது. பின்பு மூன்று குணங்கள் அமைந்திருந்த மனத்தில் ஏனைய குணங்கள் அடங்கி நிற்க, சத்துவ குணம் மாத்திரம் மலர்ந்து நின்றது. கண் வாயிலாகச் சென்ற காட்சி அந்தக்கரணத்தினூடே சென்று உறுதியை உண்டாக்கி, மற்றக் குணங்கள் தாழ்ந்து சத்துவம் தலை யெடுக்கச் செய்யவே, அப்போது ஆனந்தக் கிளர்ச்சி உண்டாயிற்று. முன்பு சொன்ன பாட்டிலே இந்த அநுபவத்தைத்தான் சேக்கிழார் சொன்னார். மற்றவர்கள் எல்லாம் காணுகின்ற காட்சி போன்றது அன்று இது. காட்சி வாயிலாகவும், கருத்து இடைகழி யாகவும், அநுபவம் உள் அறையாகவும் இருக்கிற நிகழ்ச்சி இது. கண்ணினால் கண்டு, பின்பு உள்ளே சென்று கருத்தினால் மொண்டு, பின்பு அதற்ரும் உள்ளே சென்று உயிரினால் உண்ண வேண்டும். கண் என்பது வாயில். உள்ளம் என்பது இடைகழி. உயிர் என்பது கடைசி அறை. கண்ணிலே காட்சியாகத் தோற்றி யது ஓர் அநுபவம். கருத்திலே இது உணர்ச்சியாக மாறி உயிரிலே ஆனந்தமாகக் கனிந்துவிடும். இதற்கு வாயில் கண்; வழியாக இருப்பது கருத்து; முடிவாக இருப்பது உயிர். அருணகிரிநாதப் பெருமான் இந்த மூன்றையும் சொல்கிறார். காணுதல் ஒன்று. அண்டி மொள்ளுதல் ஒன்று. உண்டு இருத்தல் ஒன்று. காணுதல் அன்பர்களுக்கே உரியது. அண்டின பிறகு மொள்ளுதல் தீவிரமாக உள்ள அன்பர்களுக்குரிய செயல். பின்பு உண்ணுதல் அநுபவி களுக்குரிய செயல். அப்படி உண்ணும் அநுபவம் மாறாமல் இருக்க வேண்டும். கண்டு அண்டி மொண்டு உண்ணுதல் முருகப்பெருமானுடைய திருவடியைத் தொண்டர்கள் காண் கிறார்கள். பின்பு அதை அண்டி மொண்டு உண்டு இருக்கிறார் களாம். காணும்போது புண்டரிகமாகக் காட்சி தருகிறது; அண்டும் பொழுது தண்டையம் புண்டரிகமாகக் காட்சி தந்து, மொள்ளும் போது ஞானமாகக் காட்சி தந்து, உண்டு இருக்கும்போது சுத்த ஞானமாகக் காட்சி தருகிறது. ஞானம் என்பது சத்துவமான அறிவு. சுத்த ஞானம் என்பது ஞானமே அநுபவமான நிலை. அதை ஞானானந்தம் என்று பேசுவார்கள். ஞாதுரு ஞான ஞேயம் என்ற திரிபுடி நிலையில் உள்ள ஞானம் வேறு; லட்சியமான ஞானா 191