பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 னந்தம் வேறு. சத், சித், ஆனந்தம் என்று சொல்கிற முறையில் சித் என்பது ஒன்று; அது ஞானம். அதுவும் அநுபவந்தான். அந்த அது பவப்பொருளைப் பிரக்ஞானம் என்று மகா வாக்கியம் கூறுகிறது. புண்டரிகம் முருகப்பெருமானுடைய திருவடி கண்ணிலே காணும் போது தாமரையைப் போன்ற தோற்றத்தை அளிக்கிறது. தாமரை மலர்களிலெல்லாம் மிகச் சிறந்தது. நல்ல மலர்களைக் கண் ணாலே கண்டால் கண்ணுக்கு நல்லது என்று சொல்வார்கள். அந்த மலரை அண்டிக் கண்டால், கண்ணில் ஒற்றிக் கொண்டால், கண்ணிலுள்ள வெதுப்புப் போகும். தொண்டர்கள் முருகப் பெருமானுடைய திருவடியைப் புண்டரிகம்ாகக் கண்டு போற்று வார்கள். அது அன்பு நிரம்பிய உள்ளமாகிய பொய்கையில் பூப்பது. ஞான மணம் கமழ்வது. வேதம் என்னும் வண்டு ஒலம் இடு கின்ற மலர் அது. இவ்வாறு பக்தர்கள் அந்தத் தாமரையைப் பாராட்டுகிறார்கள். : தண்டையம் புண்டரிகம் அது தண்டையை அணிந்து விளங்குகிறது. சேற்றிலே பூக்கிற வெறும் தாமரையைப் போலில்லாமல் அது நடக்கும் தாமரையாக இருக்கிறது. தாமரை நடக்காதே ஓரிடத்தில் நிலை யாகத்தானே இருக்கும்? இதுவோ நடக்கிற தாமரை. ஆண்டவன் தண்டை அணிந்த திருவடி உடையவன். தண்டை என்ற அணி தன்னை யணிந்த திருவடியின் இளமையைக் காட்டுகிறது. முருகன் இளம் குழந்தை. பார்க்கப் பார்க்க இன்பம் தரும் தளர் நடை யிட்டு வரும் அழகான திருவடி அவன் திருவடி. மெத்தென்ற தளர்நடையிட்டுப் பக்தர்களுடைய உள்ளத்தில் உலாவரும் சீறடி. அதை நோக்கும் போது கண்ணுக்குத் தாமரை போல எழில் தருவ தோடு, அதில் உள்ள தண்டை காதுக்கு இனிய ஒலியைத் தரும். 'திருவடியும் தண்டையும் சிலம்பும்' என்று வேறு ஓரிடத்தில் சொல்கிறார். 'தண்டையணி வெண்டையம் கிண்கிணி சதங்கையும் தண்கழல் சிலம்புடன் கொஞ்சவேநின்' என்று திருப்புகழில் அருணகிரியார் பாடுவார். 192