பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 ஒளிவிடும். அப்போது எல்லாப் பொருள்களையும் தெள்ளத் தெளியத் தெரிந்து கொள்ளலாம். ஞான விளக்கு மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழில் குமரகுருபரர் இந்தக் கருத்தை வேறு ஒருவகையில் சொல்வார். எம்பெருமாட்டியாகிய மீனாட்சி அம்மையைத் தொண்டர்கள் தம் உள்ளத் தடத்தில் வைத்துக் கொள்கிறார்களாம். அவள் அங்கே விளக்காக இருக் கிறாள். விளக்கு, தன் ஒளியினால் தன்னைக் காட்டிப் பிற பொருள்களையும் காட்டும். விளக்கு இல்லாத இடத்தில் இன்ன பொருள் இருக்கிறது என்று தெரியாது. விளக்கை ஏற்றின பிறகு அங்கேயுள்ள பொருள்களும், சுற்றிச் சூழ இருக்கிற பொருள் களும் விளங்கும். அந்த வகையில் எம்பெருமாட்டியைத் தம் முடைய திருவுள்ளத்தில் அகந்தைக் கிழங்கை அகழ்ந்தெடுத்து வைத்துப் போற்றுகிறவர்களுக்கு இந்த உலகம் முழுவதும் நன்றாக வெளிச்சமாகத் தெரியும். "அகந்தைக் கிழங்கை அகழ்ந்தெடுக்கும் தொழும்பர் உளக்கோயிற் கேற்றும் விளக்கே" என்று பாடுகிறார். இங்கேயோ, தண்டையம் புண்டரிகமாக இருக்கிற திருவடி உள்ளத் தடத்தில் ஞானத் திருவிளக்காக விளங்கும். அது பின்னும் உயிரோடு கலந்தால் சுத்த ஞான அநுபவமாக விளங்கும். தொண்டர் கண்டு அண்டி மொண்டு உண்டிருக்கும் சுத்தஞானம் எனும், தண்டையம் புண்டரிகம். படிப்படியாக ஏறுதல் கோயிலுக்குச் சென்று இறைவனுடைய திருவுருவத்தைக் காண்கிறோம். சிலர் கோயிலில் பிராகாரங்களை எல்லாம் கண்டு அங்கேயுள்ள நந்தவனத்தையும், சிற்பங்களையும், மண்டபத்திற்கு வரும் வழியையும் கண்ட அளவில் வந்துவிடுகிறார்கள். அவர் கள் கோயிலைப் பார்த்தார்களே யன்றி அதனால் உண்டாகும் பயனைப் பெறவில்லை. கோயிலைப் பார்த்த அளவில் நிற்பது பயன் அளிக்காது. கோயிலுக்குச் சென்று பார்ப்பதோடு அவற் 34