பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டையம் புண்டரிகம் 2 முருகன் வீரம் முருகப் பெருமானுடைய பெரு வீரத்தைப் பின் இரண்டு அடிகளில் அருணகிரியார் சொல்கிறார். அவன் வேலைப் பிரயோகம் செய்வதற்கு முன்னால் சூரன் தேவலோகத்தை ஆக்கிரமித்துக் கொண்டு வந்தான். அவன் கொடுமையானவன். கொடிய தண்டனை செய்கின்ற தீய குணம் உடையவன். சண்ட தண்ட வெஞ்சூர் மண்டலம் கொண்டுபண்டு அண்டர் அண்டம்கொண்டு மண்டிமிண்டக் கண்டுஉருண்டு அண்டர்விண்டு ஓடாமல் வேல்தொட்ட காவலனே. அவன் தேவலோகத்தை முற்றுகையிட்டு வட்டமிட்டான். அவன் மண்டலம் கொண்டானாம். அது பழைய கதை. தேவர் களுக்குரிய உலகத்தைத் தன்னுடையதாக்கிக் கொண்டு மேலும் மேலும் நெருங்கி வீறு பெற்று வந்தான். தேவலோகத்தை அவன் தன்னுடையதாகக் கொண்ட பிறகு தேவர்கள் பலர் அவனுக்கு அடிமையானார்கள். பலர் அவன் வருகிறான் என்று கண்டு ஓடி னார்கள். ஒடும்போது கீழே வீழ்ந்து உருண்டார்கள். சூரபன்மா வினுடைய பெயரைக் கேட்ட மாத்திரத்தில் தேவர்களுக்கு அச்சம் உண்டாயிற்று. அப்போதே ஒடத் தொடங்கினார்கள். ஒருவர் மேல் ஒருவர் உருண்டு ஓடினார்கள். அவன் பிடிக்கு அகப்பட்டு விட்டால் நம்மைக் கொன்று விடுவானே என்ற அச்சத்தால் நான் முன், நீ முன் என்று ஒடிக்கொண்டே இருந்தார்கள். அந்த நிலையை முருகப் பெருமான் மாற்றினான். தன்னுடைய திருக் கரத்திலுள்ள வேலாயுதத்தை எடுத்து வீசிச் சூரனை அழித்தான். இருவகை அமைதி தேவர்கள் மிகப் பழங்காலத்தில் அமைதியாக வாழ்ந்தார் கள். தங்கள் தங்கள் பதவியிலே பற்றை வளர்த்து, அந்தப் பதவியில் மோகம் வைத்துக் கடவுளை மறந்து வாழ்ந்தார்கள். தங்கள் நிலை என்றும் மாறாதது என்ற எண்ண்ம் கொண்டவர் க.சொ.WI-13 197