பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 களைப் போல அவற்றையெல்லாம் தங்களுக்கு அளித்த இறை வனைக்கூட மறந்து இருந்தார்கள். செல்வச் செருக்கினாலும் ஆற்றலால் உண்டான ஆணவத்தாலும் அவர்கள் தங்களை மலை போல எண்ணிக் கொண்டு ஆடாமல் அசையாமல் இருந்தார்கள் அத்தகையவர்களுடைய செருக்கைப் போக்கும் பொருட்டு ஆண்டவன் சூரனை உண்டாக்கினான். பெரும் காற்று வந்தால் பிரளய காலத்தில் மலைகள் எல்லாம் உருண்டு ஒடும் என்று சொல்வார்கள். மற்றக் காலத்தில் காற்றைத் தாங்கிக்கொண்டு துளக்கமில்லாமல் இருப்பதனால் மலைக்கு அசலம் என்று பெயர். தேவர்கள் அப்படித்தான் சிறு சிறு துன்பங்கள் வந்தால் அவற்றைப் பொருட்படுத்தாமல் மலைபோல நிமிர்ந்து நின்றார் கள். அமராவதியையும், தேவலோகத்தையும் தமக்குரிய இட மாகப் பெற்று வாழ்ந்தார்கள். உலகத்தில் தம்மை வாழ்த்துகின்ற மக்களுக்கு நலம் செய்துகொண்டு எல்லோருக்கும் மேலானவர் களாகத் தங்களை எண்ணிக்கொண்டு வாழ்ந்தார்கள். அத்தகைய சமயத்தில் சூரன் தன்னுடைய கொடுமையைக் காட்டத் தொடங்கி னான். பல படைகளை ஏவி அமரர்களுக்கு இடுக்கண் செய்தான். அசுரர் படைகள் தேவலோகத்தைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டு மண்டலம் இட்டன. அவை நெருங்கி வருவது தெரிந்து தேவர் கள் தப்பிப் பிழைப்பதற்கு எங்கே இடம் இருந்தாலும் அங்கே ஓடினார்கள். அவர்களுடைய உள்ளத்தில் அச்சம் மிகுந்தது. அதனால் ஓட்டத்தில் வேகம் மிகுதியாயிற்று. தடுக்கி விழுந் தாலும் உருண்டு ஓடினார்கள். இப்படிச் சூரனுக்குப் பயந்து ஓடி உருண்டு துன்புற்ற தேவர்களுக்கு மீட்டும் அமைதியை உண்டாக் கினான் முருகன். முன்னாலே இருந்த அமைதி அமைதியன்று. இறைவனுக்கு அஞ்சாமல் இருந்ததால் சூரனுக்கு அஞ்சி ஓடிய நிலை உண் டாயிற்று. இப்போதோ இறைவன் திருவருளினால் தமக்கு எமனாக வந்தவனை அழித்து நிலையாக நிற்கும் நிலை வந்தது. இதற்கு முன்பு அவர்லள் தங்களுக்குத் தாங்களே அரசர்கள் என்று தான்தோன்றித் தம்பிரான்களாக வாழ்ந்தார்கள். இப்போதோ சூரனை அழித்த வேலையுடைய முருகப் பெருமானைத் தங்களுடைய காவலனாக வாழ்த்திக்கொண்டு வாழ்கிற நிலை பெற்றார்கள். அமராவதியைக் காக்கும் தொழிலைப் பெயர் 1983