பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டையம் புண்டரிகம் அளவுக்கு இந்திரன் கொண்டிருந்தாலும் சூரனுக்கு எதிரே நின்று தேவர்களைக் காக்க அவனால் இயலவில்லை. அமரர்களையும், இந்திரனையும் சூரனுடைய அல்லல்களிலிருந்து காத்தவன் முருகப் பெருமான். வேலாயுதக் கடவுளாகிய அவனுடைய பாதுகாப்பில் இன்று தேவர்கள் யாவரும் சுகமாக இருக்கிறார்கள். இன்று பெற்று நிற்கிற அமைதிதான் உண்மையான அமைதி. அச்சத்தினால் உண்டான வேகம் அடங்கி அன்பினால் உண்டான அமைதியில் அவர்கள் வாழ்கிறார்கள். இப்போது அவர்களுக்கு உண்மை புலனாகியிருக்கிறது; யாவருமே ஆண்டவனுக்கு அடிமை என்ற எண்ணம் அவர்களுக்கு அநுபவத்தால் கிடைத்திருக்கிறது. சூர சங்காரம் அச்சுறுத்தலின் உருவமாகிய சூரன் நற்குணங்களுக்கு வடிவ மாகிய தேவர்களை ஒடச் செய்தான். அந்தச் சமயத்தில் அஞ் ஞானத்தைப் போக்குகின்ற ஞான சக்தியாகிய வடிவேலினை ஏவி முருகப்பெருமான் தேவர்களுக்கு நலம் செய்தான். அஞ்ஞானத்தையும் அச்சத்தையும் ஒட்டி ஞானத்தைத் தருகிறவன் அவன் என்பதைச் சூரசங்காரம் காட்டுகிறது. சுத்த ஞானம் எனும் புண்டரிகம் தருவாய் என்று முருகனைப் பார்த்து விண்ணப்பம் செய்து கொண்ட அருணகிரிநாதருக்கு, அதனையே பருப்பொருள் நிகழ்ச்சியாகக் காட்டிய சூரசங்காரம் உடனே நினைவுக்கு வந்தது. அவன் சூரனை வேல்கொண்டு அழித்துத் தேவர்களை ஓடாமல் வைத்தவன், அவர்களுக்குப் பெரும் காவலனாக இருப்பவன் என்ற நினைவு வரவே, அந்தச் செய்திகளைச் சொல்லி முருகனை விளித்தார். சண்ட தண்டவெஞ்சூர் மண்டலம் கொண்டுபண்டு அண்டர்அண் டம்கொண்டு மண்டிமிண்டக் கண்டுஉருண்டு அண்டர்விண்டு ஓடாமல் வேல்தொட்ட காவலனே. பண்டு என்பது பழங்காலத்தில் என்னும் பொருள் உடையது. நமக்குத் தெரிந்த பெரும் போர்கள் இதிகாசங்களிலும், புராணங் களிலும் வருகின்றன. ராமாயணப் போரும், பாரதப் போரும் j99