பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 இங்கே, பாரிசாத மரத்தை எடுத்து வந்த கண்ணனைத் தேவ லோகத்திலுள்ள பலரும் எதிர்த்தபோது அவன் தன்னுடைய வலம்புரியை முழக்கி அவர்களை எல்லாம் கீழே விழச் செய்தான் என்ற செய்தி நினைவில் கொள்வதற்குரியது. அதை அருண கிரியார் எடுத்துக் காட்டுகிறார். திருமால் என்று பாட்டில் கறி னாலும் கண்ணபிரானாக அவதரித்தபோது நிகழ்ந்த நிகழ்ச்சியையே இது சொல்கிறது. அவன் திருக்கரத்திலுள்ள சங்கு வலம்புரிச் சங்கம். இடம்புரி என்பது சாதாரணமாக எங்கும் கிடைக்கிறது. வலப்பக்கமாகச் சுழித்திருப்பது வலம்புரிச் சங்கு. அது மிகவும் சிறந்தது. கண்ணன் கையிலுள்ள வலம்புரிச் சங்கத்திற்குப் பாஞ்ச சன்னியம் என்று பெயர். அது பெரு முழக்கம் செய்து தேவர் களை மயங்கி விழப் பண்ணியது. அதன் முழக்கம் அப்போது தேவலோகத்திலுள்ள சோலைகளிலும் வாவிகளிலும் கேட்டது. அதைத்தான் முதலில் அருணகிரியார் சொல்கிறார். மண்கமழ் உந்தித் திருமால் வலம்புரி ஒசை அந்த விண்கமழ் சோலையும் வாவியும் கேட்டது. அந்த ஓசையும் இந்த ஒசையும் - திருமாலினுடைய உந்தி மண்கமழ் உந்தி. அது மண் வாசனை வீசுகின்றதாம். அவன் நிறைய மண்ணைத் தின்றவன். திருமாலின் வயிற்றில் அண்டபிண்ட சராசரங்கள் எல்லாம் இருப்பதனால் அவனை மண்தின்றவன் என்று சொல்வது ஒரு வழக்கு. இங்கே அந்தச் செய்தியைச் சுவைபடச் சொல்கிறார் அருணகிரியார். ஒருகால் திருமால் வேறு எதையாவது தின்று ஊதியிருந்தால் பலமாக ஊதியிருப்பான். மண்ணைத் தின்று விட்டு ஊதியதால் அவனுக்குத் தொனி அதிகமாக வரவில்லை போலும் என்று நினைக்கும்படியாகச் சொல்கிறார். கண்ணன் இது செய்ய வேண்டுமென்று நினைத்து முயன்று ஊதியது வலம்புரியோசை. ஆனால் முருகப் பெருமான் திரு அரையிலுள்ள கிண்கிணியோ அவன் விளையாடும்போது தானே ஒலித்தது. கிண்கிணி ஓசையைவிட வலிந்து ஊதின வலம்புரி ஓசைதான் மிக வலிமையுடையதாக இருக்க வேண்டும். ஆனால் இங்கே, திருமால் முயன்று மூச்சைப் பிடித்து ஊதிய வலம்புரி 2C8