பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலம்புரியும் கிண்கிணியும் யோசை முருகப்பெருமானுடைய கிண்கிணி ஓசைக்குப் பக்கத் தில் வரமுடியாது என்று பாடுகிறார். தேவலோகத்தில் கற்பக மரச்சோலை ஒன்று இருக்கிறது. அந்தச் சோலையில்தான் பாரிசாத மரம் வளர்கிறது. அங்கிருந்து ஊதின அந்தச் சங்கின் ஒசை தேவலோகம் முழுவதும்கூடக் கேட்க வில்லை. அந்த மரம் மணம் வீசுகின்ற சோலையிலும், தேவர்கள் நீராடுகின்ற வாவிகளிலும் கேட்டது. ஆனால் முருகப்பெரு மானுடைய கிண்கிணி ஓசையோ சர்வலோகமும் கேட்டதாம். அதை அடுத்தபடி சொல்ல வருகிறார் அருணகிரியார். வேல் எடுத்துத் திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளை திருவரையில் கிண்கிணி ஓசை பதினா லுலகமும் கேட்டதுவே. கிண்கிண் என்று ஒலி அ:ைமவதனால் அந்த அணிகலனுக்குக் கிண்கிணி என்ற பெயர் வந்தது. நாம் சலங்கை என்று சொல் வதுதான் அது. - முருகன் திருவிளையாடல்கள் முருகப்பெருமான் திருஅவதாரம் செய்தவுடன் தன்னுடைய பராக்கிரமத்தைக் காட்டுவதற்கு அவன் பலவகையான திருவிளை யாடல்களைச் செய்தான். அதனைக் கண்ட சூரன் முதலிய அசுரர்கள் நடுங்கினார்கள். கையில் வேலை எடுத்துக்கொண்டு அவன் ஒடியாடி விளையாடினான். அதனால் எட்டு மலைகளும் நடுங்கின. பூமி அதிர்ந்தது. இப்படி அவன் ஆடியதால் அவன் அரையிலுள்ள கிண்கிணி மிக்க ஒசையை உண்டாக்கியது. முருகப்பெருமான் இவ்வாறு செய்த திருவிளையாடல் களைக் கந்தபுராணம் திருவிளையாடல் படலம் என்று ஒரு தனிப் படலமாகவே விரித்துச் சொல்கிறது. குலகிரிகளை எல்லாம் ஓரிடத்தில் கூட்டுவான். பிறகு அவற்றை எல்லாம் தலைகீழாகப் பூமியில் நாட்டுவான். அலைகடல்கள் எல்லாவற்றையும் ஒன்றாகக் கூட்டுவான். சக்கரவாளகிரியைக் கொண்டுவந்து ஆகாச கங்கைக்கு அணையாக அமைப்பான். பாதாளத்தில் இருக்கும் எட்டுப் பெரிய நாகங்களைப் பற்றிக் கொண்டுவந்து கயிற்றைப் போல மேரு முதலிய மலைகளில் சுற்றி இழுப்பான். இப்படி அவன் 2O3