பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 யினர். விளையாடலிலோ ஒரு கட்சி வென்றாலும், ஒரு கட்டு தோற்றாலும் முடிவில் இரண்டு கட்சியினருக்கும் இன்பம். இரண்டு பேர்களும் சேர்ந்து விருந்துண்பர். விளையாடலில் கட்சி அமைத்துக் கொண்டவர்கள் ஒருகால் வெற்றி, தோல்வி என்று சொன்னாலும் அதைப் பார்த்தவர்களுக்கு மகிழ்ச்சியே உண்டாகிறது. ஆண்டவன் திண்கிரி சிந்த விளையாடினான். அந்த விளை யாடலால் உலகத்திற்கு இன்பம் உண்டானதேயன்றித் துன்பம் உண்டாகவில்லை. அவன் தன்னுடைய அருளை எல்லோரும் பெறுவதற்காகப் பலவிதமான விளையாடல்களைச் செய்கிறான். அவை வெவ்வேறு வகையாகத் தோன்றினாலும் முடிவில் இன்பத்தைத் தருவனவே. அவன் சூரபன்மனை எதிர்த்துப் போராடியதாகக் கந்தபுராணம் சொல்கிறது. அவ்வாறு செய்த போர்கூட அவனுடைய திருவிளையாடலில் ஒன்றுதான். சூரபன் மனை அழிக்க வேண்டுமென்பது அவன் நோக்கம் அன்று. முரு கனைப் பகைவன் என்று அந்த அசுரன் எண்ணினானேயொழிய, முருகன் சூரபன்மனை அவ்வாறு எண்ணவில்லை. பொல்லாத குழந்தையைத் தந்தை தண்டிப்பது போல, முருகன் அவனுடைய பொல்லாத்தனத்தைப் போக்குவதற்காகப் பல காலம் போர் செய்தான். என்றைக்காவது அவன் அறிவு பெற்றுத் தன் வலி யின்மையைத் தெரிந்துகொண்டு காலில் வந்து விழுவான் என்று எதிர்பார்த்தான். அவ்வாறு சூரன் செய்யாமையினால் கடைசியில் தன் திருவுருவத்தைக் காட்டினான். அந்தக் கோலத்தின் பேரெழி லில் மயங்கிய சூரன் உள்ளம் குழைந்து அடியாருடைய இயல்பைப் பெற்றான். அப்போது முருகப்பெருமான், இவன் உள்ளம் நையும் பண்பினனாக இருக்கிறான்; இவனை ஆட் கொள்ளலாம்' என்று கருதி அவன்மேல் வேலைவிட்டான். மாமரமாக நின்ற உருவம் பிளந்து இரண்டு பகுதிகளாக நிற்க, ஒரு பகுதி ஆண்டவன் வாகனமாகவும், மற்றொரு பகுதி சேவல் கொடியாகவும் ஆயின. சூரன் பெற்றது ஆண்டவனது வாகனமாக வும், கொடியாகவும் நிற்கும் பேறு. இது சங்காரம் ஆகுமா? இது ஒரு வகையான அருள். முருகப்பெருமான் சூரனுக்கு முன்னால் நின்று போர் செய் தது ஒரு வகையான அருள்தான் என்று சூரபன்மனே சொல் வதாகக் கந்தபுராணம் தெரிவிக்கிறது. 212