பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 வன், நமக்கு நலம் செய்யத் திரு அவதாரம் செய்திருக்கிறான் என்று உணர்ந்த பிறகு மகிழ்ந்தார்கள். ஆனால் சூரன் முதலியோர் இப்படி ஒரு பிள்ளை தோன்றி இருக்கிறதே என்று உணர்ந்து நடுங்கினார்கள். தன்னுடைய சிறந்த வலிமையையும், அருளை யும் புலப்படுத்த, முருகப்பெருமான் திரு அவதாரம் செய்தவுடன் இவ்வாறு பலவகைத் திருவிளையாடலில் ஈடுபட்டான் என்று கந்தபுராணம் பேசுகின்றது. அப்படித் திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளை, குழவி உருவங்கொண்டு திருவரையில் கிண்கிணியை அணிந்திருக்கிறான். அவன் குதித்து விளையாடும்போது, தாவி விளையாடும் போது, மலைமேலே வேலை வீசி விளையாடும்போது, அந்தக் கிண் கிணி ஒலிக்கிறது. அந்த ஓசை எல்லா உலகமும் கேட்டதாம். மேல் ஏழு உலகமும், கீழ் ஏழு உலகமும் ஆகப் பதினான்கு உலகம் உண்டென்று சொல்வார்கள். அந்தப் பதினான்கு உலகங் களிலும் அந்த ஓசை கேட்டது. விளையாட்டின் பயன் முருகப்பெருமான் செய்த திருவிளையாடலின் பயன் ஓர் இடத்திற்கு மாத்திரம் அமைவது அன்று. எல்லா உலகங்களிலும் உள்ள உயிர்கள் அவன் செய்கிற திருவிளையாடல்களினால் இன் பம் பெறுவார்கள். இதனையே அழகாக, அவன் கிண்கிணி ஓசை பதினான்கு உலகமும் கேட்டது என்பதனால் பெற வைக்கிறார். கண்ணபிரான் தன்னுடைய மனையாட்டியின் நலம் கருதிப் பாரிசாத மரத்தைக் கொண்டு வர முயன்றான். அதற்காகத் தான் இருக்கும் இடத்திலிருந்து தேவலோகம் சென்று தேவர்களோடு போரிட்டான். முயன்று மூச்சைப் பிடித்து வலம்புரி ஓசையை முழக்கினான். அந்த ஒசை பாரிசாத மரம் வளர்ந்திருந்த சோலை யிலும், அதன் அருகில் இருந்த வாவியிலும் மட்டும் கேட்டது. அதற்குமேல் அந்த முழக்கம் கேட்கவில்லை. முருகப் பெரு மானோ சரவணப் பூம்பொய்கையில் திரு அவதாரம் செய்து கந்தகிரியைச் சுற்றி விளையாடினான். அவன் விளையாடலால் மலைகள் எல்லாம் அதிர்ந்தன. அவனுடைய அழகிய இடையில் அணிந்திருந்த கிண்கிணிகள் அசைந்தன. அந்த அசைவிலே உண்டான ஓசை பதினான்கு உலகமும் கேட்டு இன்பத்தைச் 214