பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 நிலை ஏற்படுவது இல்லை. 'அவலட்சணமான கணவனை எப்படி மதிக்க முடியும்? அழகு இல்லாத மனைவியை எப்படிப் போற்ற முடியும்?' என்ற கேள்வி எழலாம். இவன்தான் நமக்குக் கணவன்; இவள்தான் நமக்கு மனைவி என்ற உறவு ஏற்பட்ட பிறகு அந்த உறவினால் பருவத்தில் தோற்றும் தோற்றத்திற்கு மதிப்பு இல்லாமல் போய்விடும். கறுப்பான தாய்க்கு ஒரு குழந்தை பிறந்தால் அவள் கறுப்பு என்பதற்காக அவள் என்னுடைய தாய் அல்ல என்ற எண்ணம் உண்டாவ தில்லை. முட்டாளாக இருந்தாலும் தன்னுடைய தாயைத் தாயாகவே நல்ல மகன் எண்ணுகிறான். அதுபோலவே அழகற்ற வனாக இருந்தாலும், அழகுள்ளவனாக இருந்தாலும், தன் - னுடைய கணவன் என்கிற பக்தியும் மதிப்பும் இளம்பருவத்திலே தோன்றிவிட்டால் அவை எப்போதும் நிலைத்து நிற்கும். அதனா லேயே அவர்கள் கற்பு நெறி பிறழாமல், அன்பில் சிதைவு பெறாமல் வாழ்ந்து வந்தார்கள். இக்காலத்திலோ கண்டதும் காதல், கொண்டதும் கோலமாக இருக்கிறது. முன்பின் பாராதவர்கள் புறத் தோற்றத்தைக் கண்டு ஏமாந்து திருமணம் செய்து கொள்கிறார்கள். பழகும்போது அவர்களுடைய இயல்போ, மற்றவைகளோ தம் இயல்புக்கு ஏற்றனவாக இராமல் முரண்பட்டால் தம் கருத்தை வேறு இடங் களில் செலுத்துகிறார்கள். குடும்பம் பாழ்படுகிறது. வெளி நாட்டுக்குச் சென்று அங்கேயே திருமணம் செய்துகொண்டு திரும்புகிறவர்களுடைய வாழ்க்கை பெரும்பாலும் நல்லறமாக இருப்பதில்லை. ஏதோ மேல் பார்வைக்கு ஒற்றுமையாக இருப் பது போலத் தோன்றினாலும் உள்ளே கடல் குமுறும். கணவன் மனைவி என்ற உறவு மிகவும் தூயது என்பதை இந்த நாட்டில் பலகாலமாக வற்புறுத்தி வந்ததைப் போல வேறு எந்த நாட்டிலும் வற்புறுத்தவில்லை. அந்த உறவைக் கணவன் மனைவியாகிய இருவரும் பாதுகாத்ததோடன்றி உறவினரும் நாட்டினரும் பலவகையில் மதிப்புக் கொடுத்துப் பாதுகாத்தார்கள். 'கல்லானாலும் கணவன்: புல்லானாலும் புருஷன் என்று சொல்லிக் கற்புணர்ச்சியை ஊட்டி வந்தார்கள். இந்த நிலை மாறுவதற்கு முக்கிய காரணம் பருவத்தினால் புறக்கண்ணுக்குத் தோற்றுகிற தோற்றத்தில் மனத்தை இழந்து நிற்பதுதான். எந்தப் 222