பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 பாராட்டித் துதி செய்கிறான். ஒரு பாட்டில் இராமபிரானின் திருக்கண்களைப் பற்றிப் பேசுகின்றான். புறக்கண்கொண்டு புறத்தைப் பார்க்கிறவர்களுக்கும், அது கண்கொண்டு அகத்தைப் பார்க்கிறவர்களுக்கும் இன்பத்தை, தருவன அக்கண்கள். புறத்தை மாத்திரம் பார்க்கிறவர்களுக்கு இராமபிரானுடைய திருவிழிகள் தாமரையைப் போலத் தோற்று கின்றன. அதுவும் ஒர் அழகுதான். ஆனால் அகக் கண் கொண்டு பார்க்கிறவர்களுக்கு அந்தப் புறக் கண்ணின் வழியாக இராம. பிரானுடைய அகத்தையும் காணும் ஆற்றல் உண்டாகிறது. அவன் திருவிழிகளின் மூலமாக அவனுடைய அகத்தைக் காணும்போது அந்த அகம் அருள் நிரம்பியதாக இருக்கிறது. உள்ளத்தில் நிரம்பி யிருக்கிற கருணை வழிந்து அவனுடைய திருவிழியிலே பொங்கு கிறது. அந்தக் கண்களை மேலெழுந்தபடி பார்க்கிறவர்களுக்கு அது தெரியாது. ஊடுருவிப் பார்க்கிறவர்களுக்கு, அந்தக் கண் களின் வழியே அகத்தைப் பார்க்கிறவர்களுக்கு, இந்த உண்மை புலனாகும். இதை விராதன் சொல்கிறான். “புறங்கான அகங்காணப் பொதுமுகத்தின் அருணோக்கம் இறங்காத தாமரைக்கண் எம்பெருமான் இயம்புதியால்' என்று அவன் துதிக்கிறான். புறக் கண்ணுக்கு இராமபிரானுடைய கண் தாமரைக் கண்ணாக விளங்குகிறது. அகம் காணும்போதோ அந்தத் தாமரைக் கண் அருள் நோக்கம் சிறிதும் இறங்காத கண்ணாக இலங்குகிறது. புறம் காண்பாருக்கும் அகம் காண் பாருக்கும் பொதுவாக முகம் இருந்தாலும், அந்தக் கண்கள் புற அழகினால் தாமரையாகவும், அக அழகினால் அருள் நோக்க முடையனவாகவும் தோற்றுகின்றன. இந்த இரண்டையும் யார் காண்கிறார்களோ அவர்களே இராமன் கண்களை முழுமையாகக் கண்டவர்கள். புற நோக்கைக் கண்ட மாத்திரத்தில் தாமரை என்று கண்டு இன்புறலாம்; ஆனால் அது பாதியளவு கண்டது போன் றதுதான். எதைக் கண்டாலும் அதனிடையே உள்ள நுட்பத்தைக் காண்பது அறிவு. அதனால் கிடைக்கிறது பேரின்பம். ஒருவனுடைய முகம் அகத்தைக் காட்டும் கண்ணாடி போன் றது. அப்படியே அவனுடைய கண்ணும் கருத்தைக் காட்டுகின்ற வாயில். இந்த இரண்டையும் ஒருங்கே பார்க்கிறவன் பார்வை தான் மெய்ப்பார்வை. விராதன், அப்படிப் பார்க்கிறவர்களுக்கு 224