பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 ருடர்களாக இருந்தவர்கள் யானையைத் தொட்டுப் பார்த்த கதை நமக்குத் தெரியும். ஒவ்வொருவனும் தான் தான் தொட்டுப் பார்த்த அங்கத்தைப் பற்றிப் பேசினான். யாரும் யானையை முழுமையாகக் கண்டவர் அல்ல. உலகில் உள்ளவற்றின் முழு அழகைக் கண்டு அந்த அழகைப் படைத்த ஆண்டவனை எண்ணிப் பாராட்டலாம். நல்ல மலரைப் பூம்பொய்கையில் வைத்து அழகைப் பாராட்டுபவர்களே சிறந்தவர்கள். அதனைப் பறித்துப் பயன்படுத்திக் கொள்ளவேண்டுமென்று எண்ணுகிறவர்கள் சிறந்த வர்கள் அல்ல. எந்த வகையில் அழகைக் கண்டாலும் அதன் வாயிலாக அதைப் படைத்தவனைக் காணுகின்ற திறமை நல்ல வர்களுக்கே உண்டாகிறது. அருணகிரியார் இப்போது சொல்கிற நெஞ்சு அத்தகையது அன்று. அந்த நெஞ்சு எதனையும் முழுமையாகப் பார்க்கிறது அன்று. உயிருடைய உடம்பில் உயிர் இருக்கிறதே, உள்ளமும் இருக்கிறதே என்று நோக்குவது இல்லை. அந்த உடம்பில் உள்ள அங்கங்களைத் தனித் தனியே பார்த்து அவற்றின் அழகில் ஈடுபட்டு, மயலில் ஆழ்கிறது. முழுமையாக இருக்கும் பொருளைத் துண்டு பண்ணி ஒவ்வொன்றையும் தனித்தனியே சுவைப்பது புலால் உண்ணுகிறவர்கள் வழக்கம். அதுபோல் இந்த நெஞ்சு ஒருவகை யில் புலால் உணவை உண்ணுவது போலச் செய்கிறது. ஒவ்வோர் அங்கமாகக் கண்டு அதன் அழகில் ஈடுபட்டு மேலே செல்கிறது. காளையின் கதை ஒர் இளம் பிள்ளை, காளைப் பருவம் உடையவன், ஒரு பெண்ணைப் பார்த்தான். அவளுடைய மேனி அழகைப் பார்க்கிற போது முதலில் முகத்தில் பார்வை சென்றது. அந்த முகத்தில் கண்ணைக் கண்டான். கண்வழியே கண் விழியையும் கண்டான். அது இப்போது இருக்க வேண்டிய இடத்தில் இல்லை. மானைப் போன்ற மருண்ட பார்வையுடைய அது காது ஒரமாகப் போய்த் தேங்கி நின்றது. காதுக்கு வள்ளை இலையை உவமை சொல்வது ஒரு வழக்கம். வள்ளை என்பது தண்ணீரில் படரும் ஒருவகைக் கொடி இந்தக் கண் கெண்டைபோல இருக்கிறது. எப்போதும் துள்ளித் துள்ளிக் குதிக்கிற கெண்டை போல அங்கும் இங்கும் பார்க்கிறது. சலனம் உள்ள பார்வை கெண்களுக்கு அழகு என்று 226