பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன மலர் 1 ஆண்டவனை அணுகி அவனுடைய அருளைப் பெற்று என்றும் மாறாத இன்பக் கடலில் ஆழ வேண்டும். இது இந்த நாட்டுச் சமயங்களின் லட்சியம். இந்த லட்சியம் எளிதில் சை கூடாது. அநாதி காலமாகப் பிறவியில் உழன்று வருகிற உயி களுக்குப் படலம் படலமாக அழுக்கேறிக் கிடக்கிறது. அந்த அழுக்கின் கனத்தினால் உயிர் எங்கோ ஆழ்கடலின் அடித்தளத் தில் கிடக்கிறது. அந்த அழுக்குப்படலம் சிறிது போனால் உயிர் சற்றே மேலே வருகிறது. மறுபடியும் அழுக்குப் படிந்தால் மறுபடியும் கீழே போய்விடுகிறது. இந்தப் போரில் அழுக்குக் கரைவது மிகுதியாக இருந்தால் அது மெல்ல மெல்ல மேலே வருகிறது. அது முன்பு இருந்த நிலையைவிட மேலே வருகிறதென்று சொல்லலாமேயன்றி, ஆழம் முழுவதும் கடந்து நீர்மட்டத்துக்கு வந்துவிட்டதாக எண்ணக்கூடாது. இன்னும் நீர்மட்டத்துக்கும் அதற்கும் எவ்வளவோ தூரம் இடையே இருக்கிறது. கடலின் மேல்மட்டமும் கீழ்மட்டமும் Gഥക്ഷേ வரும் பான்மை தொடர்ந்து இருந்தால் கீழ் மட்டத் திற்கும் அதற்கும் உள்ள தூரம் மிகுதியாகிக் கொண்டே வரும்; மேல் மட்டத்திற்கும் அதற்கும் உள்ள தூரம் குறைந்து கொண்டே வரும். உயிர் ஆரோகண கதியில் சென்று கொண்டேயிருந்தால், அதன் நிலை உயர்ந்துகொண்டே வரும். ஓரறிவுயிராக இருந்த நிலை மாறி அடுத்த படியை அடையும்; ஈரறிவுயிரில் சற்றே இழிந்தவையாக் உயரும்; பின்பு அந்த இனத்தில் சிறந்ததாக உயரும். இந்தப் போக்கிலே தடையின்றி. அது வளருமானால்,