பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 முயல்வது முறை. மிகுந்த பக்தியுள்ள ஆன்மாவைத் தான் சென்று பார்த்து கருணை செய்பவன் அவன். அவர்களை அவனே வலியத் சென்று தடுத்தாட்கொள்கிறான். அதுதான் வள்ளிநாயகியைத் திருமணம் செய்து கொண்ட திருவிளையாடலின் உண்மை. இந்தத் தத்துவத்தைப் பலமுறை முன்னாலே நாம் பார்த்திருக்கிறோம். வள்ளிநாயகி தினைப்புனத்தில் ஆலோலம் பாடிக் கொன் டிருந்தாள். தினைக்கதிர் முற்றி வந்தால் கிளிகள் வந்து கொத்தும், அந்தக் கிளிகளை ஒட்டுவதற்கு அவள் பாடுகிறாள். ஆனால் என்ன ஆச்சரியம்? கிளிகள் பின்னும் அதிகமாக வருகின்றன. காரணம் என்ன தெரியுமா? அவள் பேசுகின்ற பேச்சும், பாடு கின்ற பாட்டும் கிளியின் குரலைப் போல இருக்கின்றன. அங்கே நம்முடைய இனம் இருக்கிறதென்ற எண்ணத்தில் அந்தப் பாட்டைக் கேட்டுக் கிளிகள் வந்து கூடுகின்றன. அவள் நிறத் தாலும் குரலாலும் கிளியைப் போல இருக்கிறாள். தினைப் புனத்தில் கதிர்கள் நிறைந்து நிற்க, அதற்கு இடையில் அவள் நிற்பதால் பெரிய கிளி அமர்ந்திருப்பது போலத் தோற்றுகிறது. சில சமயங்களில் அவளே முற்றியிருந்ததினைக் கதிரை எடுத்துக் கையிலே நிமிண்டி உமியை ஊதிவிட்டுத் தெள்ளித் தின்கிறாள். அதை மாவாக்தித் தேனும் கலந்து உண்ணுகிறாள்; பிறரையும் உண்பிக்கிறாள். 'வண்ணத் திணைமாவைத் தெள்ளியே - உண்ணும் வாழ்க்கைக் குறக்குல வள்ளியே' என்று காவடிச் சிந்தில் அண்ணாமலை ரெட்டியார் பாடுகிறார். தினை விளைகின்ற கொல்லையில் கிளியைப் போல எம்பெரு மாட்டி வீற்றிருக்கிறாள். - தெள்ளிய ஏனலில் கிள்ளையைக் கள்ளச் சிறுமியெனும் வள்ளியை. கள்ளச் சிறுமி வள்ளிநாயகியைக் கள்ளச் சிறுமியென்று கூறுகிறார் அருண கிரியார். மலைப்பகுதியிலே வாழ்கிறவர்கள் குறவர்கள். குறவர் கள் திருடும் தொழில் உடையவர்கள். ஆகையால் அந்தக் குலத்தை எண்ணிக் கள்ளச் சிறுமி என்று கூறினார் என்று 230