பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல வேட்கை தெள்ளிய ஏனலிற் கிள்ளையைக் கள்ளச் சிறுமியெனும் வள்ளியை வேட்டவன் தாள் வேட்டிலை. 'புறக் கண்ணாலே புற அழகைக் கண்டு ஏமாந்து போகிற நெஞ்சமே, அகக் கண்ணினாலே அவன் திருவடியைக் கண்டு ஏத்துவாயாக. அந்தத் திருவடி தானே வலிந்து சென்று அருளைப் பில்கும் தன்மையுடையது. ஆகையால் நீ அதனை விரும்பினால் அது உன்னிடத்தில் வரும்" என்று சொல்வாரைப் போல இந்தப் பாட்டைச் சொல்கிறார். அந்தத் தாளை நாம் வேட்க வேண்டி யதுதான். அதனைப் போய் நாம் நாடிச் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆண்டவனுடைய திருத்தாள், விரும்புவாரை நாடி வருகிற தன்மை வாய்ந்தது. ஆகையால் நாம் செய்ய வேண் டியது, அதனைப் பெற வேண்டுமென்ற ஆர்வத்தை வளர்த்துக் கொள்வது ஒன்றுதான். அந்த வேட்கை மீதுர ஆண்டவன் தன்னுடைய திருவடியை நமக்குக் கொடுக்க வேண்டுமென்று ஒடி வருவான். இவற்றையெல்லாம் எண்ணி, தெள்ளிய ஏனலில் கிள்ளையைக் கள்ளச் சிறுமியெனும் வள்ளியை வேட்டவன் என்று சொன்னார். அந்தக் குற வள்ளியை வேட்டு, "சுனையோடு, அருவித் துறையோடு, பசுந் தினையோடு, இதனோடு' திரிந்த திருத்தாள் அல்லவா அது? ஆதலின் நீ விண்ணப்பம் மாத்திரம் போட்டு வைத்தால் அது உன்னை நாடிக்கொண்டு வரும் என்ற குறிப்போடு அதனைச் சொல்கிறார். 女 தெள்ளிய ஏனலில் கிள்ளையைக் கள்ளச் சிறுமிஎனும் வள்ளியை வேட்டவன் தாள்வேட் டிலைசிறு வள்ளைதள்ளித் துள்ளிய கெண்டையைத் தொண்டையைத் தோதகச் சொல்லைநல்ல வெள்ளிய நித்தில வித்தார மூரலை வேட்டநெஞ்சே. 233