பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 யாழ்ப்பாணத்துக்கு நான் செல்லும் போதெல்லாம் எனக்குத் தங்க இடம் அளித்து, உணவு வழங்கி, உபசாரம் செய்து என்னைத் தம் குடும்பத்தைச் சார்ந்த முதியவனாகவே எண்ணி நலம் செய்து வருகிறார் நீர்வேலியில் உள்ள ஓர் அன்பர். அவர் குடும்பத்தினர் அனைவரும் காட்டும் அன்புக்கு அளவே இல்லை. அவர் பெயர் ரீ இராசேந்திர குருக்கள். அவர் அந்த ஊரிலுள்ள யூரீ கந்தசாமி கோயிலில் முருகனை முப்பொழுதும் திருமேனி தீண்டிப் பூசை செய்யும் அருளாளர். யாழ்ப்பாணம் என்றவுடன் நீர் வேலிக் கந்தசாமி கோயிலும், அங்கே பூசை செய்துவரும் குருக்கள் ஐயாவும் முதலில் என் நினைவுக்கு வருவதில் வியப்பு இல்லை. முதல் முதல் நான் இலங்கையில் கண்ட கந்தசாமி கோயில் அது. இலங்கையன்பர்களுக்கு அருணகிரி நாதர் திருவாக்கில் மிகுதியான அன்பு அலங்கார அநுபூதிப் பாடல்களுக்குப் பொருள் விரித்து உரைக்கும் போது தம்மையே மறந்து கேட்டு இன்புறு கிறார்கள். இந்தக் கந்தர் அலங்காரச் சொற்பொழிவு வரிசைகளைப் படித்து இன்புற்று, அதனால் என்னிடம் பேரன்பு பூண்ட அன்பர்கள் பலர் இலங்கையில் இருக்கிறார்கள். பணம் அனுப்பிப் புத்தகம் வருவிக்கும் முறை இலங்கையில் செல்லாது. மிக்க முயற்சியின் மேல்தான் இந்த நாட்டிலிருந்து அங்கே புத்தகம் செல்ல வேண்டும். அப்படியிருந்தும் பல இலங்கையன்பர்கள் இந்த அலங்கார வரிசை நூல்களை வாங்கிப் படித்து மகிழ் கிறார்கள் என்பதை அறிந்து, இவ்வாறெல்லாம் செய்விக்கும் முருகனுடைய திருவருளை இறைஞ்சுகின்றேன். தமிழ் நாட்டிலுள்ள முருகன் அடியார்கள் பலர் இந்த வரிசை விரைவில் நிறைவுற வேண்டுமென்று பேரார்வத்துடன் இருக் கிறார்கள் என்பதை நான் அறிவேன். பலர் அடிக்கடி கடிதம் எழுதி வருகிறார்கள். முருகன் திருவருள் அவர்கள் அவாவை நிறை வேற்றிக் கொடுக்கும் என்றே நம்புகிறேன். 大 இந்தப் புத்தகம் அலங்கார வரிசையில் 18-ஆவது புத்தகம். 95 முதல் 100-ஆவது பாடல் வரையில் உள்ள ஆறு பாடல் களுக்கு இதில் விளக்கம் இருக்கிறது. பயனைச் சொல்லும் பாட்டு 238